சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு.. அதான் ரஜினி வரதுக்கு முன்பே நான் வந்துட்டேன்.. ராம்மோகன்ராவ் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் வந்துவிட்டேன் என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராம்மோகன்ராவ். இவர் பதவியிலிருந்த போதே ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.

இதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஊடக வெளிச்சத்தில் பெரிதும் படாமல் இருந்து வந்தார். ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கிய நடிகர் பவன் கல்யாணுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார்.

ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தோல்வி.. இதுதான் இந்த ஆண்டின் பாஜகவின் கதை.. ப.சி.ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் தோல்வி.. இதுதான் இந்த ஆண்டின் பாஜகவின் கதை.. ப.சி.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தெலுங்கு பேசும் பல ஜாதி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை தி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

முயற்சி

முயற்சி

அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசியலில் நாயுடு மக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அது கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அரசியல் கட்சி தொடங்குவதற்காக இந்த முயற்சிகளை செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்றார்.

அற்புதம்

அற்புதம்

மேலும் தொடர்ந்த அவர் நான் அரசியலில் நுழைந்துவிட்டேன். தமிழக அரசியலில் 100 சதவீதம் வெற்றிடம் உள்ளது. அதனால்தான் ரஜினி வருவதற்கு முன்பே நான் வந்துவிட்டேன். அதுவே அற்புதம்தான்.

இந்திய குடியுரிமை

இந்திய குடியுரிமை

ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்திய குடியுரிமையாவது வழங்க வேண்டும் என்றார்.

English summary
Tamilnadu's Ex Chief Secretary Rammohan Rao says that he has come to politics before Rajinikanth's entry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X