சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரம்ஜான் நோன்பு மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது... அரசு தலைமை காஜி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 7ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து வரும் மே 7ஆம் தேதி ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

Ramzan fasting begins From May 7th, Government Chief Gaji Announcement

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. அதன்படி, ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இருப்பினும் இன்று மாலை ரம்ஜான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நோன்பு தொடங்கும் நாளில் இருந்து, அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள்.

ஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் ஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்

மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நோன்பின் 27ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், 30ம் நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

English summary
Government Chief Gaji Announcement that Ramzan fasting begins From May 7th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X