சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் காரை பரிசாக வழங்கினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 739 காளைகள் களமிறங்கின. மொத்தம் 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றனர்.

Ranjith gets car prize from CM and Deputy CM

அப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கும் மூன்றாவது பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.

அது போல் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2ஆவது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!

இதில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டன. அதில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுவிட்டன. கார் பரிசு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என கூறப்பட்டது.

அதன்படி இன்று தலைமை செயலகத்திற்கு ரஞ்சித் வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு கார் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினர்.

English summary
CM Edappadi Palanisamy and Deputy CM O Paneerselvam presented car to Jallikattu winner Ranjith.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X