சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவள்ளுவர், விவேகானந்தர் பல புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் - விவேக் வேதனை

நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் நடைபெறுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார், விவேகானந்தர் ஆகிய புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் நடைபெறுவதாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹத்ராவில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

Rape murders in india land where many saints lived - Vivek

இதனிடையே புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

புனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்புனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rape murders in india land where many saints lived - Vivek

அன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் விவேக்.

English summary
Actor Vivek has posted on his Twitter page that rape and murder are taking place in the land where the saints Thirumoolar, Thiruvalluvar, Vallalar and Vivekananda lived. The rape and murder of a 19-year-old girl in Hatra, Uttar Pradesh, has sent shockwaves across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X