சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி நினைவிடத்தில அஞ்சலி செலுத்த வந்த கனிமொழி. சமாதியை பார்த்து கண்ணீர் சிந்திய ராசாத்தியம்மாள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results | தமிழிசையை தோற்கடித்த கனிமொழி: செய்தியாளர்களுக்கு பேட்டி- வீடியோ

    சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கனிமொழியுடன் வந்த ராசாத்தியம்மாள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கருணாநிதி சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு காரணமாக அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாமலும் எந்த விழாக்களுக்கும் செல்லாமலும் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

    இது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் அனுபவம் வாய்ந்த நல்லதொரு தலைவரை இழந்துவிட்டோம் என பொதுமக்களும் துவண்டுவிட்டார்கள்.

     இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்! இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்!

    37 தொகுதிகள்

    37 தொகுதிகள்

    இந்த நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது போல் சட்டசபை இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளை வென்றது.

    தாய் ராசாத்தியம்மாள்

    தாய் ராசாத்தியம்மாள்

    இதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியும் முதல் முறையாக வெற்றி பெற்று லோக்சபா எம்பியாகியுள்ளார். இதையடுத்து தனது தந்தை கருணாநிதியிடம் ஆசி வாங்குவதற்காக மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்துக்கு தாய் ராசாத்தியம்மாள், கணவர் அரவிந்த் ஆகியோருடன் கனிமொழி சென்றார்.

    அதிமுகவின் ஒரே எம்பி.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி? அதிமுகவின் ஒரே எம்பி.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி?

    துக்கம்

    துக்கம்

    அப்போது ஓயாமல் உழைத்துவிட்டு உறங்கி கொண்டிருக்கும் கருணாநிதியை பார்த்தவுடன் ராசாத்தியம்மாளுக்கு நெஞ்சடைத்தது. துக்கத்தை அடக்க முடியாமல் அழத் தொடங்கினார்.

    தேற்றிய கனிமொழி

    தேற்றிய கனிமொழி

    பின்னர் சமாதியை சுற்றி வரும் போது சமாதிக்கு பின்னால் அழுதார். அவரை கனிமொழி தேற்றி அழைத்து சென்றார். பின்னர் கனிமொழி வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து கருணாநிதியிடம் ஆசி பெற்றார். கனிமொழிக்கு ராசாத்தியம்மாள் முத்தமிட்டார்.

    நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி! நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

    English summary
    Rasathiammal cries in Karunanidhi's memorial when accompanied with Kanimozhi who get blessings from her dad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X