ஸ்டாலின் போட்ட போடு.. "தவறு எங்கே நடந்தது?".. முதல் விக்கெட் காலி.. நடுநடுங்கும் கோட்டை
சென்னை: எப்படி தவறு ஏற்பட்டது, எங்கு தவறு ஏற்பட்டது, உடனே தெரிந்தாக வேண்டும் என்று பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் புகார்கள் குறித்து உத்தரவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. இப்போது அந்த கறுப்பு ஆடு சிக்கிவிட்டது.. பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி காட்டி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது..
பிக்பாஸ் அல்டிமேட்:நிழலை வைத்து ஆட்டம் காட்டிய பிக் பாஸ்..மூன்று கேள்வியில் புரிந்து கொண்ட ரசிகர்கள்
ஆனால், அந்த பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தது.. அந்த விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி இருக்கிறது என்ற பகீர் குற்றச்சாட்டுகள் வந்தன..

பொங்கல் பணம்
ஏற்கனவே பொங்கல் பணம் இல்லை என்ற ஆதங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருந்தபோது, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான குற்றச்சாட்டுகள் மேலும் அதிருப்தியை பெருக்கி, விமர்சனங்களையும் உருவாக்கியது.. மக்களே மறந்தாலும், இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் மறக்காமல் தினம் தினம் பிரச்சாரமாக்கி கொண்டிருந்தன.. போதாக்குறைக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று, எடப்பாடி பழனிசாமி ஒரே போடாக போட்டது, திமுகவை நிஜமாகவே கலங்கடித்துவிட்டது..

அதிர்ச்சி
அதனால்தான், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அக்கறை காட்டினார்.. காரணம், அதிமுக மாஜிக்களின் ஊழல் விஷயங்களை, திமுக அரசு கையில் எடுத்து, அவர்கள் ஒவ்வொருரின் மீதும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திமுக அரசின் மீதே இப்படி ஒரு ஊழல் புகாரை எடப்பாடி முன்வைத்திருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. முதல்வர் ஸ்டாலின் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையையும் கடந்த வாரம் நடத்தினார்..

கறுப்பு பட்டியல்
ஒருவேளை இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் தவறுகள் நடந்திருந்தால், விசாரணைக்குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கையை முதல்வர் என்ற நம்பிக்கை எழுந்தது.. அதன்படியே, பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது என்று கண்டிப்புடன் முதலமைச்சர் கூறியிருந்தார்.

விரிவான விசாரணை
அதன்படியே, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இப்போது விஷயம் என்னவென்றால், சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. அன்று முதல்வர் போட்ட போடு, இன்று ஒருவர் சிக்கி உள்ளார்..

பொருட்களின் தரம்
அதுமட்டுமல்ல, இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவாக விசாரணை செய்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன...

நன்மதிப்பு
எனவே கூடியசீக்கிரம் மெத்தனமாக செயல்பட்ட மேலும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.. இதனால் கோட்டை வட்டாரமே கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்துள்ளது.. ஒரு சின்ன குற்றச்சாட்டை முன்வைத்தாலும், அது தொடர்பாக உடனே விசாரிக்கப்பட்டு உடனே ஆக்ஷனும் எடுத்து விடுவது முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் நன்மதிப்பை பெற்று தந்து வருகிறது.