சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரேசன் கடைகள் நாளை திறந்திருக்கும்.. பொருட்கள் வாங்கலாம் மக்களே

ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் நாளை ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

Ration shops are open on January 30th Sunday People can buy groceries

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக குடும்பங்களுக்கு 2,11,93,724 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6,82,12,884 பேர் பயனடைந்து வருகின்றனர்.

PHH என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டை என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH - AYY என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா என்று பொருள்படும். இதற்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

NPHH என்று குறிப்பிட்டவை முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH - S என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

NPHH - NC என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் பொருட்களில்லா அட்டை எனப்படும். இதற்கு எந்தவிதப் பொருட்களும் கிடைக்காது. கவுரவ ரேசன் அட்டை என்று இந்த அட்டையை குறிப்பிடுகின்றனர்.

ஞாயிறுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக ரேசன்கடைகள் மூடப்பட்டன. தற்போது ஞாயிறுக்கிழமைகளில் ஊரடங்கு இல்லை என்று அரசு அறிவித்துள்ளதால் நாளை ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிறன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

வரும் நாட்களில் தமிழ்ப்புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 14 வியாழன், மே தினம் மே 1, ஞாயிறு, ரம்ஜான் மே 5, செவ்வாய் , சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, திங்கள், விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31, புதன், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2, ஞாயிறு, (10) விஜயதசமி அக்டோபர் 10, புதன், தீபாவளி அக்டோபர் 24, திங்கள், கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆகிய 12 நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து தமிக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

English summary
The Department of Food Supply and Consumer Protection has announced that all ration shops in Tamil Nadu will be operational tomorrow on Sunday, January 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X