• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ராவணன் மசாலா உரிமையாளர் ராமசாமி திடீர் கைது

|

சென்னை: ராவணன் மசாலா உரிமையாளர் ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த ஞானவேல் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில், ஏலச்சீட்டு நடத்தி வரும் ராவணனிடம் 20 மாதங்களில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கட்டியதாகவும், ஆனால் அந்த சீட்டுப்பணத்தை ராமசாமி திருப்பி தரவில்லை என்றும், கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார், எனவே பணத்தை மீட்டு தாருங்கள் என்று கேட்டு கொண்டிருந்தார்.

Ravana Masala Owner Ramasay arrested in Chennai

இந்த புகார் குறித்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ராவணன் ராமசாமி சீட்டுக்கு பணம் வாங்கியதும், புகார் அளித்த ஞானவேலுவை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, ராவணன் ராமசாமி மீது பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பிறகு ராமசாமி ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராவணன் ராமசாமியை புழல் சிறையில் அடைத்தனர். இவரது மனைவி செல்வராணி மீதும் மோசடி வழக்கு உள்ளது. ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தனது மசாலா நிறுவனத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதும், பெரிய தொகைக்கு சீட்டு எடுத்தவர்கள் உரிய பணத்தை சரியான நேரத்தில் தராதது, உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து ராமசாமியை நெறுக்கி தள்ளிவிட்டது என்றும் அதனால்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

 
 
 
English summary
Ravana Masala Owner Ramasay arrested in Chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more