சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழந்தமிழர் பெருமையை சீனா அதிபருக்கு மொழிபெயர்த்த தமிழ் மகன் மதுசூதனன் ரவீந்தரன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பழந்தமிழர் பெருமையை சீனா அதிபருக்கு மொழிபெயர்த்த தமிழ் மகன் மதுசூதனன் ரவீந்தரன்!-வீடியோ

    சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குக்கு பழந்தமிழர் வாழ்வியலையும் பிரதமர் மோடியின் அரசியல் கருத்துகளையும் எடுத்துக் கூறிய மொழிபெயர்ப்பாளர் தமிழரான மதுசூதனன் ரவீந்தரன்.

    மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் சந்தித்த போது 3-வது நபராக அதிக கவனம் ஈர்த்தார் ஒரு அதிகாரி. பழந்தமிழரின் சிற்பக் கலையின் உன்னதத்தை சீனா அதிபருக்கு அவர் விளக்கிக் கொண்டே இருந்தார்.

    Ravindran MadhuSudhan serves as Translator for Modi- Jinping Meet

    பிரதமர் மோடியின் அரசியல் கருத்துகளையும் சீனா அதிபருக்கு எடுத்துக் கூறி அனைவரது பார்வையையும் தம் பக்கம் திரும்ப வைத்தார் அந்த அதிகாரி. அவர் சீனாவில் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளராக உள்ள தமிழரான மதுசூதனன் ரவீந்தரன்.

    சென்னை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவரான மதுசூதனன் ரவீந்தரன், 2007-ல் இந்திய வெளியுறவுப் பணியில் இணைந்தார். தொடக்கத்தில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் 3-வது நிலை செயலராக பணியில் அமர்ந்தார். இதனைத் தொடந்து சான்பிரான்சிஸ்கோவில் பணி.

    2013-ல் மீண்டும் சீனாவுக்கே திரும்பினார். தொடர்ச்சியாக சீனாவிலேயே பணிபுரிவதால் அந்நாட்டு மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவரானார் மதுசூதனன். இதனாலேயே இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்புகளில் மொழிபெயர்ப்பாளராக மதுசூதனன் ரவீந்தரன் பங்கெடுக்கிறார்.

    Ravindran MadhuSudhan serves as Translator for Modi- Jinping Meet

    கடந்த முறை பிரதமர் மோடி, ஜின்பிங் சந்திப்பின் போதும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவரும் நம்ம மதுசூதனன்தான். இவரது தந்தை கோவையைச் சேர்ந்தவர்; தாய் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்; டேராடூன் ராணுவ கல்லூரியிலும் கல்வி கற்றவர் மதுசூதனன் ரவீந்தரன்.

    English summary
    IFS officer Ravindran MadhuSudan served as a Translator for PM Modi and Chinese President Xi Jinping Meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X