சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு உறையில் 2 கத்தியா?.. "என்னோட முதல்வர் வேட்பாளரே வேற"... அதிமுகவினரே உஷாராகுங்கப்பா!

எடப்பாடியார்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: "கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதல்வர் வேட்பாளர் பதவி இரண்டையும் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், 2 குதிரைகளில் எத்தனை நாளைக்கு சவாரி செய்ய முடியும்? ஒரு உறையில் 2 கத்தி என்பது சாத்தியமா?" என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காங்கே கேள்வி எழுப்பவே செய்தாலும், எடப்பாடியார்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று நம் வாசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. அதேசமயம், "என்னோட முதல்வர் வேட்பாளரே வேற" என்றும் அதிமுகவுக்கு எதிரான ஒரு மனநிலையிலும் உள்ளனர் என்பது தெளிவாகிறது.

பல்வேறு சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள், பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, ஒருவழியாக வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 5 பேர், எடப்பாடியாருக்கு 6 பேர் என இந்த குழு அடங்கி உள்ளது. எடப்பாடியை பொறுத்தவரை இந்த குழுவே வேண்டாம் என்பதில் இருந்து ஒரு ஸ்டெப் இறங்கி வந்திருக்கிறார். ஓபிஎஸ்-ன் கோரிக்கையும் ஓரளவுக்கு ஏற்கப்பட்டுவிட்டது.

இருந்தாலும், வழிகாட்டு குழு அமைத்தபிறகும் சில சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. பெண் பிரதிநிதிகள் இல்லை, தலித், இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லை என்பது உட்பட, சீனியர் தலைவர்களின் அதிருப்திகளும் சேர்ந்து வெடித்து வருகிறது. இந்நிலையில், நம் வாசகர்களிடம் ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினோம்.. "அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு" என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

 ஆப்ஷன்

ஆப்ஷன்

அதற்கு "சரியான தேர்வு" என்ற ஆப்ஷனுக்கு 38.11 சதவீதம் பேரும், "ஓபிஎஸ்ஸை போட்டிருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 8.57 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "வேறு தலைவரை அறிவித்திருக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 10.36 சதவீதம் பேரும், "என்னோட முதல்வர் வேட்பாளரே வேற" என்ற ஆப்ஷனுக்கு 42.96 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

 கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இந்த கணிப்பை பொறுத்தவரை, எடப்பாடியார் பக்கமே வாசகர்கள் நின்றுள்ளது தெரியவந்துள்ளது. "ஓபிஎஸ்ஸை போட்டிருக்கலாம்" என்ற ஆப்ஷனின் 8.57. சதவீதத்தையும் "எடப்பாடி சரியான தேர்வு" என்ற ஆப்ஷனின் 38.11 சதவீதத்தையும் ஒரே கணக்கீடாகவே எடுத்து கொள்ளலாம். அந்த வகையில் எடப்பாடியார் பெஸ்ட் சாய்ஸ் என்பதை மறுப்பதற்கில்லை.

 அலார்ட்

அலார்ட்

இதில் ஒபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருந்தால், அதிமுக நிலை சற்று சிரமம்தான் என்ற அலார்ட்டையும் இந்த கணிப்பு செய்துள்ளது. அதேநேரத்தில், "கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதல்வர் வேட்பாளர் பதவி இரண்டையும் தன்வசம் வைத்திருக்கும் முதல், 2 குதிரைகளில் எத்தனை நாளைக்கு சவாரி செய்ய முடியும்? ஒரு உறையில் 2 கத்தி சாத்தியமா?" என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிண்டலாக பேசி வருவதையும் மறுக்க முடியாது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இவ்வளவு நாள் தேனியில் போஸ்டர் அடித்து "வருங்கால முதல்வரே" என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த ஆதரவாளர்களை இனி என்ன சொல்லி ஓபிஎஸ் சமாளிக்க போகிறார் என்பதும் பெரிய எதிர்பார்ப்புதான். இருந்தாலும் இந்த 4 வருடங்களில் முழுக்க முழுக்க தன்னையும், தன் மகனையும் பாஜக ஆதரவாளராகவே காட்டிக் கொண்டிருந்த ஓபிஎஸ்-க்கு இது பெரும் பின்னடைவுதான். அதுமட்டுமல்ல, கடந்த சில நாள்களில், முக்குலத்தோர் சாதி லாபியை முடுக்கிவிட்டும் அது பெருத்த பலனை பெற்று தரவில்லை என்பதையும் இந்த கணிப்பு உணர்த்துகிறது.

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

"என்னோட முதல்வர் வேட்பாளரே வேற" என்ற ஆப்ஷனுக்குதான் வாசகர்கள் திரண்டு வந்து 42.96 சதவீதம் வாக்கை அழுத்தமாக செலுத்தி உள்ளனர்.. இது அதிமுகவுக்கு எதிரான சதவீதமாகும்.. இருவரும் கடந்த 10 நாட்களாக மோதிக் கொண்டது அது கட்சியை வலுவிழக்க செய்திருப்பதையே இது உணர்த்துகிறது.. இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஜெயலலிதாவின் ஓட்டு வங்கியை தக்கவைக்க முடியும் என்ற எச்சரிக்கை மணியையும் பலமாகவே அடித்து புரிய வைத்துள்ளது.

English summary
Readers have some other CM candidate in their mind, here is the opinion poll results
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X