சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்ப குஷ்பு அங்கதான் நிற்கபோறாரா? கதை வேறுமாதிரி போகுதே.. களம் இறங்கிய சிடி.ரவி.. திமுகவில் ஷாக்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நடிகை குஷ்பு உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, குஷ்புவுக்கு ஓட்டுப் போட தயாரா? என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியா என்ற கேள்வி எழுகிறது.

Recommended Video

    அப்ப குஷ்பு அங்கதான் நிற்கபோறாரா? கதை வேறுமாதிரி போகுதே.. களம் இறங்கிய சிடி.ரவி - வீடியோ

    தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.

    இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் தனியாகவும் போட்டியிடுகின்றனர். அதிமுக அணியில் உள்ள பாஜக முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறது.

    பாஜக பலம்

    பாஜக பலம்

    நோட்டாவிற்கு கீழ் ஒட்டு வாங்கிய கட்சி என்று சக அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்ததை மாற்றி காட்டுகிறோம் என்று களம் இறங்கியுள்ள பாஜக பல்வேறு பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்துள்ளது. ஏராளமான அரசியல் தலைவர்களும், கிளை மட்ட அளவில் பல கட்சிகளின் நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்துள்ளனர். ஒவ்வாரு வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் அளவுக்கு பாஜக வலிமை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    30 தொகுதி

    30 தொகுதி

    பாஜக இந்த முறை அதிமுவிடம் அதிக தொகுதிகள் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 30 தொகுதிகளில் பாஜக இந்த முறை போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்திற்கு பல்வேறு மத்திய அமைச்சர்கள் அடிக்கடி வந்து இப்போதே பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டனர். பிரதமர் மோடியே நாளை தமிழகம் வர உள்ளார்.

    குஷ்பு பிரச்சாரம்

    குஷ்பு பிரச்சாரம்

    இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என தெரிவித்தார்.

    நியாயமா இது

    நியாயமா இது

    தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி குஷ்புவுக்கு ஓட்டு போட தயாராக என கேள்வி எழுப்பினார். மோடி ஆட்சியின் போதுதான் தமிழகத்திற்கு பல திட்டங்கள் வந்து உள்ளது. ஆனால் பாஜகவில் இருந்து ஒரு எம்.பி, எம்எல்ஏ கூட தமிழகத்தில் இல்லாததது நியாயமா..? என கேள்வி எழுப்பினார்.

    குஷ்பு போட்டியா?

    குஷ்பு போட்டியா?

    திமுகவின் பழம்பெரும் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி பலமுறை போட்டியிட்ட தொகுதி சேப்பாக்கம். இந்த தொகுதி திமுகவின் கோட்டையாகும். இங்கு ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்று கருத்து உலா வருகிறது. இங்கு குஷ்புவை போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக என்ற பரபரப்பு காணப்படுகிறது. திமுகவினரிடையே இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Ready to vote to Kushbu? questioned by tamilnadu BJP head incharge CD Ravi in chennai triplicane election compagin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X