சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாட்டிறைச்சியும், கோமாதாவும்.. சும்மா இருக்காத ரெஹனா.. அடுத்த புது பஞ்சாயத்து.. கோர்ட் கண்டனம்

ரெஹ்னா பாத்திமாவின் மாட்டிறைச்சி சர்ச்சை பேச்சை கோர்ட் கண்டித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மாட்டிறைச்சியை "கோமாதா" என்று வேண்டுமென்றே சொல்லி உள்ளார் ரெஹனா.. இந்த பேச்சு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், கோர்ட் வரை இந்த விவகாரம் சென்று, மறுபடியும் கோர்ட், ரெஹனாவுக்கு கடுமையான வார்னிங் தந்து கண்டித்துள்ளது.

பொதுவாக எதையாவது பேசி சிலர் சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.. ஆனால் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே நினைக்கும் ஒருவர்தான் ரெஹ்னா!

சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்தபோது, அங்கு மலைஏற சென்றவர்தான் பாத்திமா ரெஹானா.. கேரள சமூக செயற்பாட்டாளர்.. இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. இதற்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை அங்கிருந்து நீக்கிவிட்டனர்.

பாத்திமா

பாத்திமா

இதற்கு பிறகு, உடலை பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, தன்னுடைய குழந்தைகளை விட்டு, அவர் உடலில் ஓவியம் வரைய சொன்னார்.. இதற்கு ஒட்டுமொத்த கேரள மக்கள் உட்பட சுப்ரீம் கோர்ட் வரை அதிருப்தியை சந்தித்து கொண்டார்.. இந்த மாதிரி கேஸ் எல்லாம் எங்களுக்கு வரணுமா என்று நீதிபதியே நொந்து கொண்ட சம்பவமும் நடந்தது.

சர்ச்சை

சர்ச்சை

இப்போது மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ரெஹனா சென்றிருந்தார்.. அப்போது மாட்டிறைச்சி சமைத்துக் கொண்டிருந்தார்... தான் சமைத்த மாட்டிறைச்சி உணவிற்கு "கோமாதா உலர்த்" என்று பெயர் சொன்னார்.. மாட்டிறைச்சியை கோமாதா என்று சொன்னதுதான் பல தரப்பையும் அதிர வைத்தது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது.

கோமாதா

கோமாதா

வேண்டுமென்றே இந்து சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கோமாதா என்ற இறைச்சியை சமைப்பதாக கூறியுள்ளதாக பலரும் கமெண்ட்களை பதிவிட்டனர். பசுவை புனிதமாக கருதும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.. இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்தனர்.. அதனடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 153ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கொள்

மேற்கொள்

இந்த வழக்கை விசாரித்த கேரள கோர்ட் விசாரித்தது.. அப்போது, கோமாதா என்ற சொல் புனிதமான பசுவை குறிக்கும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை... ஆனால், மனுதாரர் மேற்கோள் காட்டிய வேதங்களில் பழங்காலத்தில் இருந்தே பசுக்களை தெய்வமாக மக்கள் மதித்து வழிபட்டு வந்துள்ளனர். இதை லட்சக்கணக்கான இந்துக்கள் நம்புவது தெரிகிறது.

வழக்கு

வழக்கு

எனவே கோமாதா என்ற வார்த்தையை இறைச்சிக்கு நிகராக பயன்படுத்துவது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடியது.அதனால், ஜாமீன் நிபந்தனைகளை ரெஹனா மீறியுள்ளார். சபரிமலை வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரை, இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை ரெஹனா தெரிவிக்கக் கூடாது என்று கோர்ட் மறுபடியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Rehna Fathimas controversy about Beef dish as Gomatha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X