• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே

|
  Lok Sabha Elections 2019: தேர்தல் களேபரங்கள்...கூட்டணி முதல் பிரச்சாரம் வரை-Oneindia Tamil

  சென்னை: விஷயம் தெரியுமா... வணக்கம் வெக்கறதுக்கு வேட்பாளர்கள் யோசித்து.. கெத்து காட்டி கொண்டே போகிறார்களாம்!

  ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஒரு ஓட்டினால் அரசியலே மாறி போன வரலாறுகளும் நமக்கு உண்டு!

  அதனால்தான் முன்பெல்லாம் வேட்பாளர்கள் தொகுதிக்குள் சென்று ஓட்டு கேட்கும்போது, அவர்களுக்குள் அந்த தேர்தலின் மீதான பயம் இருக்கும்.. கண்ணில் படுபவர்கள் எல்லாம் தமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும்!

  ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதல்.. முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி

  தயங்க மாட்டார்கள்

  தயங்க மாட்டார்கள்

  கரடு முரடு தோற்றம் உடைய வேட்பாளர்கள்கூட, ஓட்டு கேட்கும் சமயங்களில் "மீசை வெச்ச குழந்தைகளாக" மாறிவிடுவார்கள். சில சமயம்.. வேட்பாளர்கள் வயதில் பெரியவர்களாக இருந்தால் காலில் விழுந்தும் ஓட்டு கேட்க தயங்க மாட்டார்கள்!

  கெத்துதான்

  கெத்துதான்

  ஆனால் இப்போது நிலைமை என்ன தெரியுமா.. வெறும் கெத்துதான்.. நீ ஓட்டு போட்டா எனக்கென்ன, போடாட்டி எனக்கென்ன என்கிற ரீதியில்தான் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள். வணக்கம் வெக்கக்கூட தயங்குகிறார்கள்.. கும்பிட்டு வாக்கு கேட்க கூட யோசிக்கிறார்கள்!

  பிரபலங்கள்

  பிரபலங்கள்

  சிவகங்கை தொகுதியில் இந்த கெத்து கொஞ்சம் ஓவராக தெரிகிறதாம். காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பாஜக சார்பில் எச்.ராஜாவும் போட்டியிடுகிறார்கள். சிவகங்கை ஸ்டார் தொகுதிதான்.. ரெண்டு பேருமே பிரபலங்கள்தான்.. வசதிக்கும், பேருக்கும், புகழுக்கும் பஞ்சமில்லைதான்! இவ்வளவு இருந்தாலும் எதற்காக இப்போது போட்டியிட வேண்டும் என்பது தெரியவில்லை!

  ஒரே கும்பிடு

  ஒரே கும்பிடு

  ஆனால் பிரச்சார வண்டியை விட்டு கீழேயே இறங்குவது கிடையாதாம். அதுவும் ஒரு கிராமங்களுக்குள் செல்லும்போது இந்த நிலைமை இன்னும் மோசம்! வாக்கு சேகரிக்க உடன் செல்பவர் வாய் கிழிய பேசி முடித்தவுடன், பெயருக்கு... கடைசியாக... மொத்தமாக எல்லாரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்புகிறார்களாம்!

  ஈவிகேஎஸ்

  ஈவிகேஎஸ்

  இதுபோலதான், முக ஸ்டாலின் ராமதநாதபுரம் சென்றபோது, இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது எல்லா வேட்பாளர்களுமே கைகூப்பி வணங்கியபடியே மேடையில் நின்றிருந்தனர். ஆனால் ஈவிகேஎஸ் மட்டும் வணக்கம்கூட சொல்லாமல் நின்றிருந்தார்!

  போடாட்டி போங்க

  போடாட்டி போங்க

  இவர்களை விட ஒருபடி மேல போய்விட்டார் தம்பிதுரை.. வாக்கு கேட்க போன இடத்தில், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, "ஓட்டு போட்டா போடுங்க.. போடாட்டி போங்க.. உங்க கால்ல எல்லாம் விழுந்து கெஞ்ச முடியாது" என்று பச்சையாகவே சொல்லிவிட்டு போனார்!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  It is said that some TN Political Leaders ignore the voters and do not even show them humble.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more