சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் முழுக்க 43,051 வினியோக மையங்கள்.. நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க மறவாதீர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மார்ச் 10 ம் தேதி (நாளை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 11, 12ம் தேதிகளில் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள் , ரயில் நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என காலை 7 மணியிலிருந்து இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து முகாம் நடைபெற உள்ளது.

Remember: polio drops camp from Tomorrow

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு, விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 43,051 சொட்டு மருந்து வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மண்டையைப் பிளக்கும் வெயிலின் இடையில்... மழை பெய்ய வாய்ப்பு மண்டையைப் பிளக்கும் வெயிலின் இடையில்... மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 2004 ம் ஆண்டுக்கு பின் போலியோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதுமுதல் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
polio drops camp will be held on March 10 in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X