சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கிகள் மட்டும் இதை முறையாக செய்தால்.. நீங்க வாங்கிய கடனுக்கான இஎம்ஐ அதிரடியாக குறையும்!

Google Oneindia Tamil News

சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 4.40 இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன் வட்டி விதிகங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கான நியாயமான பலன்களை வங்கிகள் வழங்குமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Recommended Video

    RBI has extended moratorium on term loans

    ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இதுவரை பலமுறை குறைத்துள்ளது. ஆனால் அதன் பலன்கள் வங்கிகளிடம் இருந்து மக்களுக்கு இதுவரை எந்த அளவுக்கு போய்சேர்ந்திருக்கும் என்பதை கேள்வியாக எழுப்பினால், யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் தான் சேர்ந்திருக்கும்.

    உண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது போல் வங்கிகளும் கடன் விகிதங்களை குறைத்து இருந்தால் மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைத்திருக்கும். ஒவ்வொருவருக்கும் பல ஆயிரங்கள் மிச்சமாகி இருக்கும். ஆனால் வங்கிகள் அதன் பலன்களை பொதுவாக பெரிய அளவில் வழங்கியதில்லை.

    குட்டி நாட்டுக்கு முளைத்த கொம்பு.. இந்தியாவை சீண்டும் நேபாளம்.. சீனாவுக்கு ஏன் இந்த அடாவடி!குட்டி நாட்டுக்கு முளைத்த கொம்பு.. இந்தியாவை சீண்டும் நேபாளம்.. சீனாவுக்கு ஏன் இந்த அடாவடி!

    வாகன கடன்

    வாகன கடன்

    ரிசர்வ் வங்கி இதுவரை 4.40 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு கடன் வழங்கி வந்தது.. இதை வாங்கி வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் என்று ஒவ்வொரு வங்கிகளும் பொதுமக்களுக்கு வழங்குகின்றன. தனி நபர் கடன் 10.5 சதவீதததிற்கு மேல் உள்ளது. இதேபோல் வீட்டு கடன் 7.25% -முதல் 10 சதவீதம் வரை வழங்குகின்றன. வாகன கடன் 8.75 சதவீதத்தில் இருந்து 10.65 சதவீதம் வரை உள்ளது. இதுதவிர பிரசசிஸ் கட்டணம் என்றும் தனியாக உள்ளது.

    குறுகிய கால கடன்

    குறுகிய கால கடன்

    சரி இப்போது விஷயத்திற்கு வரும். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்குகிறது அல்லவா அதுதான் ரெப்போ வட்டி விகிதம். அதுதான் இன்றைக்கு 4.40 சதவீதத்தில் இருந்து 4 ஆக குறைத்துள்ளது. இதை பற்றி விளக்கமாக பார்ப்போம் குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே, ரெப்போ ரேட் (Repo Rate) என்று அழைக்கிறார்கள். அதே போல் நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி, பேங்க் ரேட் (Bank Rate) என்பார்கள். உதாரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 4 சதவிகிதம் என நிர்ணயித்தால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்கு 4 சதவிகிதம் வட்டியைச் செலுத்த வேண்டும்.

    பணப்புழக்கம் அதிகரிக்க

    பணப்புழக்கம் அதிகரிக்க

    ரிசர்வ் வங்கி 2019ம் ஆண்டில் கிட்டத்தட்ட 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. அதாவது 2சதவீத வட்டியை குறைத்துள்ளது. ஏன் இப்படி குறைக்கிறது என்றால். அதற்கு காரணம் இதுதான். ஏதேனும் நெருக்கடி காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விடுகிறது. தொழிற்துறை (Industry) மொத்தமாக முடக்கிவிடும். அப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்து வந்துள்து.

    கடன்கள் வட்டி குறையும்

    கடன்கள் வட்டி குறையும்

    ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைப்பார்கள். குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பதால் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டினை வங்கியிலிருந்து கடனாகப் பெறுவார்கள். இதேபோல் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்., அவர்கள் அதிக அளவில் கார், பைக். வீடு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவற்றை தவணை முறையில் வாங்குவார்கள். இதனால் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்கும், மக்களிடமும் பணபுழக்கம் அதிகமாகும்.

    வங்கிகள் வழங்குமா

    வங்கிகள் வழங்குமா

    நாடு தற்போது கொரோனாவால் மிகப்பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்கள் பணப்புழக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை துவக்க பணம் இல்லாமல் சுணக்கத்தில் உள்ளன. இவற்றை எல்லாம் இயல்பு நிலைக்கு கொண்டுவர தாராளமாக வங்கிகள் கடன் வழங்க வேண்டும். அப்படி கடன் வழங்கும் போது வட்டி குறைவாக இருந்தால் தான் மக்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே ரிசர்வ் வங்கி அறிவித்த படி ரெப்போ வட்டி குறைப்பு பலனை இந்த முறையாவது வங்கிகள் மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி வழங்கினால் வங்கியில் கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ குறையும். அத்துடன் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பலனும் இருக்கும். இல்லாவிட்டால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற நிலையாகி விடும்.

    English summary
    Loan EMIs should get cheaper as RBI cuts repo rate if the banks pass the benefits to customers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X