சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மெரினாவில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை இன்று நடந்தது.

கடற்படை, விமானப்படை, ராணுவப்படை ஆகிய முப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்திசிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

60 கிமீ.. 5 ரூட்கள்.. டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி.. கிடைத்தது அனுமதி.. விவசாயிகள்60 கிமீ.. 5 ரூட்கள்.. டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி.. கிடைத்தது அனுமதி.. விவசாயிகள்

குடியரசு தின விழா

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்திசிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

இறுதிக்கட்ட ஒத்திகை

இறுதிக்கட்ட ஒத்திகை

இந்த நிலையில் இன்று காலை மெரினாவில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. கடற்படை, விமானப்படை, ராணுவப்படை ஆகிய முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் அணிவகுப்பு நடத்தினர். மேலும் பல்வேறு துறையினரின் அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.

முப்படை அணிவகுப்பு

முப்படை அணிவகுப்பு

சில நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே முதல்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது அதைத் தொடர்ந்து, முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

மோட்டார் சைக்கிள் ஒத்திகை

மோட்டார் சைக்கிள் ஒத்திகை

தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை, ஆர்.பி.எப்., தமிழக காவல்துறை, தீயணைப்பு படை ஆகியோர் அடுத்தடுத்து அணிவகுத்தனர். காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ஒத்திகை நடைபெற்றது. இது காண்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

English summary
The final parade rehearsal took place today at the Chennai Marina as the 26th Republic Day is being celebrated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X