சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செங்கல்பட்டில் காம்பவுண்ட் சுவர் வரை தேங்கியுள்ள வெள்ளம்.. திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Recommended Video

    செங்கல்பட்டில் காம்பவுண்ட் சுவர் வரை தேங்கியுள்ள வெள்ளம்.. திம்மாவரம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. தரைப்பாலங்கள் முழுவதும் தண்ணீர் செல்வதால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டன.

    இதனால் கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்.. நிவாரணத் தொகை உயர்த்தப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்.. நிவாரணத் தொகை உயர்த்தப்படும்.. அன்பில் மகேஷ் உறுதி

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம்

    இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே கனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது மேற்கண்ட மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    வேகமாக செல்லும் நீர்

    வேகமாக செல்லும் நீர்

    சாலைகளில் ஆறு போல் நீர் வேகமாக செல்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரிகள நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    வெள்ளநீர்

    வெள்ளநீர்

    ஏதோ ஆற்றுப் பகுதிக்குள் வீடு இருப்பது போன்று வெள்ளநீர் ஆக்ரோஷமாக ஓடுகிறது. மக்கள் மேல்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். பெரும்பாலானோர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார்கள். சில வீடுகளில் நடுத்தர வயதினர் ஓரிருவர் உள்ளார்கள். வீடு பூட்டியிருப்பதை வைத்து திருட்டுச்சம்பவம் நடக்கக் கூடாது என்பதால் வீட்டிற்கு ஒருவர் என இருந்து வருகிறார்கள்.

    வீடியோ

    வீடியோ

    செங்கல்பட்டு பகுதிகளில் வெள்ளநீர் குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் மொட்டை மாடிகளில் உள்ளனர். காம்பவுண்ட் சுவர் வரை தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தண்ணீர் தேங்காமல் ஓடியும் தண்ணீரின் அளவு குறைந்தபாடில்லை என்கிறார்கள் அப்பகுதிவாசிகள்.

    English summary
    Residential houses are surrounded with flood water in Chengleput as heavy pour in Thimmavaram Canal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X