சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு பார்கள், கடற்கரை மூடல்.. புத்தாண்டை கொண்டாட தடை.. கமிஷனர் வார்னிங்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகள் வரையறைக்கப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: நாளை இரவு 10 மணிக்கு சென்னையில் ஹோட்டல்கள்,கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான பார்களை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும்.. வழக்கமாக சென்னையை பொறுத்தவரை புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுவர்.. குறிப்பாக லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவார்கள். அதேபோல, ஸ்டார் ஹோட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்பார்கள்.

Restrictions on New Year celebrations in Chennai

ஆனால், இந்த வருடம் எல்லாமே தலைகீழாகிவிட்டது.. கொரோனா தொற்று இந்தியாவுக்குள் ஊடுருவி மொத்த பேரையும் உலுக்கி எடுத்து வருகிறது.. தற்போதும் இதன் தாக்கம் குறையாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

அதன்காரணமாக, ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை, நாளை இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது என சென்னை மாநகர காவல் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.. அதேபோல, உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..

பீச் ரோட்டில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது... அதேபோல, சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் நள்ளிரவில் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு இரவு வழக்கம்போல போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர் என்றாலும் இந்த முறை 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், 300 இடங்களில் வாகன சோதனை நடைபெற உள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சபாஷ் திருநங்கைகள்.. சென்னையை அசர வைத்து.. இரண்டு சிறுமிகளையும் மீட்டு.. புல்லரித்துப்போன போலீசார் சபாஷ் திருநங்கைகள்.. சென்னையை அசர வைத்து.. இரண்டு சிறுமிகளையும் மீட்டு.. புல்லரித்துப்போன போலீசார்

தடையை மீறி யாராவது ஸ்டார் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல, வாகனங்களில் ரேஸ் நடத்தினால், அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டும் என்று கமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Restrictions on New Year celebrations in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X