• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரீவைண்ட் 2020.. வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளித்த இளம்பெண் முதல் 100 வயசு பாட்டி வரை.. காஞ்சி டாப் 10

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வருடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு இதுவாகும்.. 2020-ல் நடந்த சில சம்பவங்களில், முக்கிய சம்பவங்கள் 10ஐ மட்டும் இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

1. ஒரு கிராமத்தை தத்தெடுத்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்தான் முதலிடத்தை பிடித்துள்ளார். தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் என்ற கிராமத்தைதான இவர் தத்தெடுத்தார். புதுசா ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், ஒரு வெள்ளிக்கிணறும் அமைத்துதரும்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடவும், அதனையும் உடனடியாக நிறைவேற்றி தர உறுதி தந்தார் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்.

Rewind 2020- Top 10 incidents happened in Kancheepuram district

2. "எல்லாத்துக்கும் கவர்ன்மென்ட்டை எதிர்பார்க்காதீங்க.. நாமளே கொரோனாவை ஒழிக்கலாம்" என்று வீட்டு வாசற்படியில் மஞ்சள் தண்ணீரை தெளித்த இடம்பெண்தான் இரண்டாம் இடத்தை பிடித்தார். உத்திரமேரூர் கிராம பகுதியை சேர்ந்த இந்த பெண்தான், யதார்த்தமாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

3. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே சாலவாக்கம் அருகே ஒரு பாட்டியின் 100வது பிறந்த நாள் விழா 3வது இடத்தை பிடித்துள்ளது.. ஆனம்பாக்கம் கிராமத்தில் பொன்னம்மாள் பாட்டிக்குதான் பிறந்த நாள் கொண்டாப்பட்டது.. கேக்கை வெட்டியதுடன், இந்த பாட்டி தன் பிறந்த நாளில் டான்ஸ் ஆடினதுதான் அன்றைய தினம் ஹைலைட்டே!

4. கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக, டிவி ரிப்போர்ட்டர் மோசஸ் மிக கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் 4வது இடத்தை பிடித்துள்ளது. குன்றத்தூர் பகுதியை சேர்ந்த மோசஸ், தன் உயிருக்கு ஆபத்து என்று போலீசில் புகார் தெரிவித்தும் இவர் கொல்லப்பட்டார். இது அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

5. காஞ்சிபுரம், சின்னையன் என்ற பகுதியில் சிசிடிவி கேமராவை பார்த்தால், கையில் இரும்புக் கம்பியை எடுத்து கொண்டு, ஒவ்வொரு வீடாக நோட்டம் போட்ட திருடன்தான் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.. எத்தனையோ தொடர் கொள்ளை நடந்தும், இந்த இரும்பு திருடனைஇதுவரை போலீசார் பிடிக்கவே முடியவில்லையாம்.

6. ஜமீன் பல்லாவரம் அரசு பள்ளிதலைமை ஆசிரியர் சுதா, தன் லட்சியத்துக்காக சொந்த பேரனை நிதீஷை அரசு நகராட்சி பள்ளியில் சேர்த்தார்.. இந்த முயற்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

ரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை ரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை

7. காஞ்சிகாடன் தெருவில் உள்ள ஒரு ஆலமரத்தில் விந்தையான ஆந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.. இது மனிதமுகம் கொண்டது.. இதை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர். பிறகு இது வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

8. வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ 7-ம் இடத்தை பெறுகிறார்.. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனிதான் வேட்டியை மடிச்சி கட்டி, பிளீச்சிங் பவுடரையும் கொட்டி அந்த பகுதி மக்களின் பாராட்டை அள்ளி கொண்டார்.

9. நிவர் புயலில், பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நெற்பயிரில் நீரில் மூழ்கின.,.. இதை பார்த்து விவசாயிகள் கண் கலங்கினர்.

10. 3 நாட்கள் பெய்த நிவர் புயலின் கனமழையில் காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 358 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது கடைசி இடத்தை பிடித்தது.. 909 ஏரிகளில் 358 ஏரிகள் நிரம்பியது வரலாற்றிலேயே முதல் முறையாகும். இப்படி பல சுவாரஸ்யங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

English summary
Rewind 2020- Top 10 incidents happened in Kancheepuram district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X