சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000.. எப்போது கிடைக்கும்!

Google Oneindia Tamil News

சென்னை: அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.இந்த திட்டம் நாளை மறுநாளே தொடங்க உள்ளது.

ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.

rice card holders will get pongal gift and rs 1000 with in week

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக நேற்று உதயமான நிலையில் அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சென்ற ஆண்டு வறட்சி பாதித்த நிலையில், ஏழைகளை பாதிக்காத வண்ணம், அரிசி கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1000 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருட்களுக்கும் பிற பணிகளுக்கும் செலவழித்துவிட்ட நிலையில் அவர்களுக்கு சிரமம்இன்றி பொங்கல் திருவிழாவை இந்த ஆண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்ற ஆண்டை போலவேஇந்த ஆண்டும் அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

வெள்ளை மாளிகைக்கு மேல் பறந்த பொருள்.. பங்கருக்குள் பதுங்கிய டிரம்ப்.. இன்னும் வெளிவராத மர்மம்!வெள்ளை மாளிகைக்கு மேல் பறந்த பொருள்.. பங்கருக்குள் பதுங்கிய டிரம்ப்.. இன்னும் வெளிவராத மர்மம்!

முதல்வர் அறிவிப்பின் படி ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கும் திட்டம் நாளை மறுநாளே தொடங்குகிறது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
rice card holders will get pongal gift and rs 1000 with in week, tn cm edappadi palanisamy will launched pongal gift scheme on friday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X