சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

LGBT கொடியுடன் சிகரெட் புகைக்கும் “காளி” - லீனா மணிமேகலையின் ஆவண படத்தால் பாஜகவினர் கொதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கியுள்ள "காளி" என்ற ஆவண படத்துக்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

    Leena Manimegalai-யின் ஆவண படத்தால் பாஜக-வினர் கொதிப்பு, “காளி” *TamilNadu | Oneindia Tamil

    பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக அவலங்கள் குறித்த கருத்துக்களை பதவி செய்து வருவபர்.

    ஈழப்போராட்டம், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் உரிமைகள் தொடர்பாக இவர் எழுதிய கவிதை மிகவும் பிரபலமானவை.

    பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி.. இதான் தேச பக்தியா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி.. இதான் தேச பக்தியா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

    லீனா மணிமேகலையின் படங்கள்

    லீனா மணிமேகலையின் படங்கள்

    கவிதைகள் மட்டுமின்றி ஆவணப் படங்கள் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். தேவதைகள், பறை, பலிபீடம் உள்ளிட்ட ஆவணப் படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கி இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு தஞ்சம் புக வரும் ஈழ அகதிகளின் வலியை உணர்த்தும் வகையில் செங்கடல் படத்தை எடுத்த லீனா மணிமேகலை, மாடத்தி படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு இழைக்கப்படும் சாதிய ஒடுக்குமுறைகளை பேசியது.

    மாடத்தி திரைப்படம்

    மாடத்தி திரைப்படம்

    அவரது மாடத்தி திரைப்படம் 15 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இதன் டிரைலரை நந்திதா தாஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டார். கேரள அமைச்சர் சைலஜா டீச்சரும் அந்த டிரைலரை பகிர்ந்து பாராட்டி இருந்தார். ஓடிடியில் வெளியான மாடத்தி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

    காளி திரைப்படம்

    காளி திரைப்படம்

    இந்த நிலையில் அவர், காளி என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. "காளி" என்ற தலைப்புடன் அதற்கு பின்னால் பெண் கடவுள் கையில் திரிசூலத்தையும் மறு கையில் சிகரெட் பிடித்திருக்கிறது. அத்துடன் LGBT சமூகத்தின் வானவில் கொடியும் அதில் காட்டப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டரில் கடும் எதிர்ப்பு

    ட்விட்டரில் கடும் எதிர்ப்பு

    இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வலதுசாரிகள், பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்து மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக வி.எச்.பி தலைவர் சாத்வி பிரக்யா உள்ளிட்டோரும் லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி இருக்கின்றனர்.

    English summary
    Right wings demand to arrest Leena Manimegalai for her Kaali Documentry film: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கியுள்ள ”காளி” என்ற ஆவண படத்துக்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X