சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி

Google Oneindia Tamil News

Recommended Video

    Film Directors Association Election : இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி- வீடியோ

    சென்னை: தமிழ்நாடு இயக்குநர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கட்டிடத்தில், நடைபெற்றது.

    RK Selvamani win in Film Directors Association Election

    காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் மாலை 4 மணி வரை நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அலுவலராக இருந்து, இந்த தேர்தலை நடத்தினார். இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும், இயக்குனர் வித்யாசாகரும் போட்டியிட்டனர்.

    இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், சங்கர், சீமான், பேரரசு, எஸ்.ஏ.சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சமுத்திரகனி உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 2,400 உறுப்பினர்கள் உள்ள இயக்குநர் சங்கத்தில் 2045 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

    இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்றார். பதிவான வாக்குகளில் 17 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டன.

    துணைத் தலைவர்கள் பதவிக்கானத் தேர்தலில், கே.எஸ்.ரவிக்குமார், 1,289 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, ரவிமரியா 1077 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.வி உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் பேரரசுவும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    Film Directors Association Election: RK Selvamani wins by majority votes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X