சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.5000 பரிசு... சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் பரிசு.. தமிழக அரசு அதிரடி

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசு

Google Oneindia Tamil News

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்தபடியே வருகிறது.. அதிலும், விபத்தில் சிக்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்! புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்!

இதை குறைப்பற்காகவே, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு பரிசு தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 பரிசுத் தொகை

பரிசுத் தொகை

அந்த வகையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசு தொகை வழங்கும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் தேசிய அளவில் அவர்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று கூடுதலாக அறிவித்திருந்தது.

 புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்த புதிய திட்டம் அக்டோபர் 15, முதல் மார்ச் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், தமிழக அரசு இதுகுறித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்:

பரிசு

பரிசு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

அறிவிப்பு

அறிவிப்பு

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துக்களையும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் 'மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ' ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசுத் தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Road accident and 5000 rupees cash reward for rushing victims to hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X