சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவை தொடர்ந்து கொரோனா பணியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ரோபோ- அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவை தொடர்ந்து கொரோனா பணியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பல நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

Robots to be used in Stanley hospital, says Vijayabaskar

இதனால் பல்வேறு நாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கேரள மருத்துவமனைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்திலும் ரோபோக்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ஸ்டான்லி மருத்துவமனையை ஆய்வு செய்தேன். அங்கு கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படவுள்ள ரோபோக்களின் செயல்பாடுகளை சோதனை செய்தேன்.

இந்த ரோபோக்கள் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகளை அளிக்கும். இதன் மூலம் நோயாளிகளுடன் மருத்துவர்கள், செவிலியர்களின் நேரடி தொடர்பு குறைக்கப்பட்டும் நோய் தொற்றும் அபாயமும் குறைக்கப்படும் என்றார்.

English summary
Minister Vijayabaskar says that he visited Stanley hospital morning and checked the functions of robotic nurses to be used in Corona wards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X