சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி... மத்திய அரசு பணிக்கு மாற்றம்

    சென்னை: தமிழ்நாடு இசை, கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணி மத்திய அரசின் உயர்கல்வித் துறை துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    தமிழ்நாடு இசை, கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக இருந்தவர் ரோஹிணி. இவர் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் உள்ள விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். புனேவில் என்ஜினியரிங் முடித்த இவர் 2008-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

    நான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சுநான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு

    முதல் பெண் ஆட்சியர்

    முதல் பெண் ஆட்சியர்

    இதையடுத்து நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் சேலம் மாவட்டத்துக்கு கடந்த 2017-இல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். அந்த மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் பெற்றார்.

    கடைபிடித்த ரோஹிணி

    கடைபிடித்த ரோஹிணி

    இவர் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, பொதுமக்களுடன் அன்பாக பழகி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களின் போது ஆளும்கட்சிக்கு ரோஹிணி கெடுபிடிகளை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.

    போஸ்டர்

    போஸ்டர்

    இதையடுத்து தமிழ்நாடு இசை, கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை திரும்ப பெற இந்து மகா சபையினர் தமிழக அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசுக்கு மாற்றம்

    மத்திய அரசுக்கு மாற்றம்

    தற்போது ரோஹிணி, மத்திய அரசின் உயர்கல்வித் துறை துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    English summary
    Salem Ex collector Rohini who was a registrar in Tamilnadu Music and Fine arts college is now transferred to Central Government's higher education deputy secretary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X