• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஒர்க் பிரம் ஹோம் எதிரொலி.. கம்ப்யூட்டர் டேபிள், சேருக்கு செம கிராக்கி.. சூடுபிடிக்கும் விற்பனை

|

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தற்போது பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களுக்கு சலுகை கொடுத்துள்ளதால் பெரிய கடைகளில் தற்போது நாற்காலி, டேபிள், லேப்டாப் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

  WFH எதிரொலி.. கம்ப்யூட்டர் டேபிள், சேருக்கு செம கிராக்கி.. சூடுபிடிக்கும் விற்பனை

  கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அது போல் ஒரு மாதம் முழுக்க அத்தியாவசிய பணியாளர்களை தவிர்த்து மற்ற துறையினர் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

  அரசு உத்தரவிடுவதற்கு முன்னரே கொரோனாவிலிருந்து பாதுகாக்க பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறிவிட்டன.

  பாட்டிக்கு வயசு 75 .. ஏற்கனவே ஞாபக மறதி நோயால் அவதி.. அவரை போய் பலாத்காரம் செய்த காமுகன்!

  பெரிய கடைகள்

  பெரிய கடைகள்

  அது போல் சில பத்திரிகை நிறுவனங்கள், டிவி சேனல்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக ஆன்லைன் மூலம் பர்னிச்சர்கள், லேப்டாப்களை மக்கள் வாங்கி வந்தனர். அதன் பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டு தமிழகத்தில் பல்வேறு பெரிய கடைகள் திறக்கப்பட்டவுடன் மக்கள் அந்த கடைகளில் குவிய தொடங்கிவிட்டனர்.

  ஸ்கேனர்

  ஸ்கேனர்

  குவிகிறார்கள் என்றால் அரசு கூறிய நெறிமுறைகளை கடைப்பிடித்தவாறு கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியும் அவர்கள் பாதுகாப்பாக குவிகிறார்கள். சென்னை பாடியில் உள்ள ஒரு பிரபல பல்பொருள் கடையில் நாற்காலிகள், டேபிள்கள், செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை விற்பனை ஜரூராக உள்ளது. இந்த கடைக்கு வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பார்க்கப்பட்டு கிருமிநாசினி கொடுக்கப்பட்ட பின்னரே உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. அது போல் மாஸ்க் இன்றி வருவோரை அனுமதிக்கவில்லை.

  இன்டர்நெட் இணைப்பு

  இன்டர்நெட் இணைப்பு

  இத்தனை நாட்கள் அலுவலகம் சென்று பணியாற்றியவர்கள், தற்போது வீட்டிலிருந்து பணியாற்ற நிறுவனங்கள் கூறிவிட்டதால் தங்களிடம் இல்லாத பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்கிறார்கள். பொதுவாக வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நல்ல வசதியான நாற்காலிகள், டேபிள்கள் தேவைப்படுகிறது. அத்துடன் லேப்டாப்புடன் நல்ல வேகமான இன்டர்நெட் இணைப்பும் தேவைப்படுகிறது.

  நாற்காலிகள்

  நாற்காலிகள்

  சென்னை பாடி கடையில் தினந்தோறும் நாற்காலிகள், டேபிள்கள் ஸ்டாக் வருகின்றன. அவை சில மணிநேரத்தில் காலியாகிவிடுவதாக கடை ஊழியர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து அந்த கடையில் இருந்த ஒரு ஊழியர் கூறுகையில் கடந்த 1 ஆம் தேதி முதல் கடையை திறந்தோம். அன்று முதல் இன்று வரை சுழலும் நாற்காலிகள் (Rolling chairs), டேபிள்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

  டேபிள்களும்

  டேபிள்களும்

  எங்களிடம் அனைத்து விதமான நிறுவனங்களின் சேர்களும், டேபிள்களும் இருக்கின்றன. ஆனால் எந்த கடைகளில் இருந்து எங்களுக்கு சரக்கு வருகிறதோ அவற்றை ஒரு மணி நேரத்தில் சோதனை செய்து குடோனிலிருந்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். அவை வந்த சில மணி நேரங்களில் விற்பனையாகிவிடுகின்றன. அது போல் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு என்பதால் அவர்களும் லேப்டாப், போன்களை பயன்படுத்துவதற்காக சிறிய வகையிலான சேர்கள், டேபிள்களை வாங்கிச் செல்கிறார்கள்.

  விற்பனை பொருட்கள்

  விற்பனை பொருட்கள்

  இது மட்டுமல்லாமல் எங்கள் கடைகளில் கீழ் தளங்களில் உள்ள செல்போன்கள், ஹெட்செட், லேப்டாப்கள் உள்ளிட்டவை அதிகமாக விற்பனையாகின்றன. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்கள் பள்ளி திறப்பதால் லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களும், ஷூக்கள், சாக்ஸ்கள் உள்ளிட்டவையும் அமோக விற்பனையாகும்.

  கள ஆய்வு

  கள ஆய்வு

  ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் அவற்றை வாங்க ஆளில்லை என்றார். நேற்றைய தினம் ஒரு கள ஆய்வு நடத்துவதற்காக அந்த கடைக்கு சென்றோம். நாங்கள் செல்லும் நேரத்தில்தான் புதிய ஸ்டாக்குகள் வந்தன. எங்களுக்கு தேவையான நாற்காலி ஒன்றை வாங்கிவிட்டு மேலே மாடிகளுக்கு சென்றுவிட்டு வருவதற்குள் அத்தனை சேர்களும் விற்பனைக்கு சென்றுவிட்டன. கடைகளின் முகப்பு பக்கங்களில் டெலிவரி அனுப்புவதற்காக நாற்காலிகள் குழுமி கிடந்ததையும் பார்க்க முடிந்தது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Rolling chairs and tables are being sold in Chennai familiar shops as because of companies provide Work From Home option for their employees.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X