சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாதவரத்தில் வியாசர்பாடி காவல் நிலைய காவலரை ரவுடி வல்லரசு திட்டமிட்டு வரவழைத்து வெட்டியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வல்லரசு. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் வியாசர்பாடி எம்என் கார்டன் பகுதியில் ரவுடிகள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அட்டகாசம் செய்து வருவதாக வியாசர்பாடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரான பவுன்ராஜ், அதிகாலை 4.15 மணிக்கு சக காவலர்களுடன் சென்று ரவுடிகளை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலைநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை

பலி

பலி

அப்போது கூட்டாளிகளுடன் இருந்த ரவுடி வல்லரசு காவலர் பவுன்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பவுன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதே சமயம் ரவுடி வல்லரசு மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த ரவுடி வல்லரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

செல்போனில் தொடர்பு

செல்போனில் தொடர்பு

இந்த நிலையில் ரவுடி வல்லரசுவை கைது செய்ய போலீஸார் அங்கு வரவில்லை என்றும் போலீஸாரை ரவுடி வல்லரசுவே வரவழைத்தது தெரியவந்தது. வியாசர்பாடியில் குற்றங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் இடம் பெற்றுள்ள காவலர் பவுன்ராஜை ரவுடி கதிரவன் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ரமேஷ் மீது தாக்குதல்

ரமேஷ் மீது தாக்குதல்

அப்போது அவர் ஒரு குற்றவாளியை பிடித்து வைத்திருப்பதாக கூறியதை நம்பி பவுன்ராஜும், ரமேஷும் கதிரவன் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த வல்லரசு, பவுன்ராஜை வெட்டியுள்ளார். அதை தடுக்க முயன்ற ரமேஷையும் தாக்கியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து வல்லரசுவும் அவரது கூட்டாளிகளும் தப்பி சென்றனர். எனினும் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பவுன்ராஜை தாக்கிய வழக்கில் மாதவரம் வந்த போலீஸ்காரர்களையும் வல்லரசு தாக்கியுள்ளார். இதனால் அவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

பரபரப்பு

பரபரப்பு

போலீஸாரை தாக்குவதற்கு அவர்களை வலிய வரவழைத்து கடைசியில் வல்லரசு உயிரை விட்டதுதான் மிச்சம். மாதவரம் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Rowdy Vallarasu made a plan to attack police and he himself called police. In this plan Rowdy died of gun shot by Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X