சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!

வரிச்சியூர் செல்வத்துக்கு விவிஐபி பாஸ் தந்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க பாருங்க!!

    சென்னை: 2 கிலோ நகைகளை அணிந்து வலம் வரும், ஃபேமஸ் ரவுடி வரிச்சூர் செல்வம் விவிஐபி வரிசையில் அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் குழப்பி அடித்து வருகிறது.

    வரிச்சியூர் செல்வம்.. இவர் பெயர் தமிழகம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். கழுத்து நிறைய நகைகளுடனேயே எப்போதும் காட்சி தருவதுதான் இவர் ஸ்பெஷலிட்டி. இவர் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

    பலமுறை மாமியார் வீட்டுக்குபோய் வந்தவர். கடைசி நேரங்களில் போலீசாரின் என்கவுன்டரில் 3 முறை மிஸ். ஆகி எஸ். ஆனவர். இப்போதைக்கு திருந்தி வாழ்கிறேன் என்று சொல்லி வருகிறார் என்றாலும், ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா என்ன? பழையபடியே வேலையை காட்டி வருகிறார் என்கிறார்கள்.

    மதுரை ரவுடி

    மதுரை ரவுடி

    இந்த அளவுக்கு பாப்புலர் ஆன ஒருவர்தான் அத்திவரதரை தரிசிக்க சென்றுள்ளார். யார் வேண்டுமானாலும் கடவுளை தரிசிக்கலாம் என்றாலும், இவர் விவிஐபிக்கள் வரிசையில் சென்றுள்ளார் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

    விவிஐபி

    விவிஐபி

    இந்த விவிஐபிக்கள் வரிசையில்தான் நம் குடியரசு தலைவர் சென்று வந்தார். அந்த வரிசையில் இவர் எப்படி சென்றார், அதற்கு அனுமதி பாஸ் யார் தந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லை, அவருக்காக சிறப்பு தரிசனம் வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மக்கள் அவதி

    மக்கள் அவதி

    ஒருநாளைக்கு லட்சக்கணக்கான பேர் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, காஞ்சிபுரம் வந்து தரிசித்து செல்கிறார்கள். எத்தனையோர் கூட்ட நெரிசலால் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஆனால் ஒரு ரவுடி ஸ்பெஷல் தரிசனம் செய்தது எப்படி என்ற கேள்வி 2 நாட்களாக எழுந்தபடியே இருந்தது. எப்படி ஜனாதிபதி அனுமதிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டாரோ, அதுபோலவே ரவுடி வரிச்சூயூர் செல்வமும் அனுமதிக்கப்பட்டு சாமி சிலை அருகே உட்கார வைக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலானதும் விவகாரமும் பெரிதாகி உள்ளது.

    தரிசனம்

    தரிசனம்

    வரிச்சூயூர் செல்வத்துக்கு கிடைத்த விவிஐபி பாஸ் யார் தந்தது? எப்படி கிடைத்தது? அது போலியானதா? என்று அதிகாரிகள் இப்போது விசாரணையை கையில் எடுத்து உள்ளனர். மேலும் ரவுடி தரிசனம் செய்த நேரத்தில் கொடுத்த விஐபி பாஸ் நுழைவு சீட்டை கைப்பற்றி அதனை வழங்கியது யார்? என்று தனியாகவும் விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    Madurai Rowdy Varichyur Selvam went to aththi varathar temple with VVIP Special Pass
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X