சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுக்க திடீர் பணத்தட்டுப்பாடு.. ரூ.2000 நோட்டு வரத்து இல்லை.. 200 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.2000 நோட்டு வரத்து இல்லை... நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு

    சென்னை: நாட்டின் பல பகுதிகளிலும் புழக்கத்திலிருந்து திடீரென ரூ.2000 நோட்டுக்கள் குறையத் தொடங்கியுள்ளன. அதற்கான பின்னணி காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு அறிமுகம் செய்யப்பட்டதுதான், ரூ.2000 நோட்டு. உயர் மதிப்பில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்துவிட்டு, அதைவிட உயர் மதிப்பு நோட்டை அறிமுகம் செய்வது அடிப்படை தவறு என அப்போதே பொருளாதார வல்லுநர்கள் குமுறினர்.

    ஆனால், நல்ல பிங்க் கலரில் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டு அமர்க்களப்படுத்தியது மோடி அரசு.

    நிறுத்தம்

    நிறுத்தம்

    இந்த நிலையில், ரூ.2000 நோட்டு அச்சடிப்பதை, கடந்த ஜனவரி மாதம் முதலே ரிசர்வ் வங்கி, நிறுத்தி விட்டது. ஏற்கனவே அச்சடித்த நோட்டுக்கள் மட்டுமே புழங்கிவந்தன. ஆனால் சமீபகாலமாக அதுவும் சில வாரங்களாக 2000 ரூபாய் நோட்டு புழக்கம் மிக, மிக குறைந்து போய்விட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி அதிகாரிகளோ, அதெல்லாம் பற்றாக்குறை இல்லை என்று கூறி வருகிறார்கள்.

    தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்

    ஏடிஎம் பிரச்சினை

    ஏடிஎம் பிரச்சினை

    மக்களிடம் பணத்திற்கான தேவை அதிகம் இருப்பதை மனதில் வைத்து, ரூ.200 நோட்டு உள்ளிட்ட குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை அதிகம் அச்சிட்டு வருகிறோம். ஏடிஎம்களில் இந்த நோட்டுக்களை எடுக்க வசதியாக, மாற்றங்களை செய்யும் பணிகளும் நடந்து கொண்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.

    18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!

    நோட்டுக்கள் எண்ணிக்கை

    நோட்டுக்கள் எண்ணிக்கை

    ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏடிஎம்களுக்கு வழங்கப்படும் ரூ.2000 நோட்டுக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நாட்டில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. அதில் 50 விழுக்காடு ஏடிஎம்களில் 200 ரூபாய் நோட்டுக்கள் புழங்கும் வசதி கொண்டவையாக மாற்றப்படவில்லை. இதனால், 200 ரூபாய் நோட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    தேவை அதிகரிப்பு

    தேவை அதிகரிப்பு

    ஒருபக்கம் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் குறைந்துவிட்டது. மற்றொரு பக்கம், ரூ.200 நோட்டுக்களை கையாளும் அளவுக்கு ஏடிஎம்கள் இல்லை. எனவே நோட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்கிறார், ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு இயக்குநரான பாலசுப்பிரமணியன்.

    பதுக்கல்

    பதுக்கல்

    பொதுவாக தேர்தல் நேரத்தில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்படுவது வழக்கம். இப்போது 2000 ரூபாய் நோட்டுக்களும் இப்படியாகத்தான் பதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் நிதித்துறை வல்லுநர்கள். ஒரு பக்கம் பதுக்கல் மறுபக்கம் 200 ரூபாய் நோட்டுக்களை கையாளும், ஏடிஎம் இயந்திரங்களில் பிரச்சினை என மக்களுக்குதான் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    In many parts of the country, suddenly Rs.2000 notes circulation comes down.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X