சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெட்ராஸில் இவ்ளோ பஞ்சத்துக்கு நடுவிலயும்.. எவ்ளோ தண்ணீர்.. ஆஹா பருத்திப்பட்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கல்

    சென்னை: குடிக்க கூட தண்ணி இல்லாமல் சென்னைவாசிகள் அல்லோலப்பட்டு வருகிறார்கள் என்றால், இதே சென்னைக்கு அருகில் பளிங்கு மாதிரி தண்ணீர் ஏரி நிறைய வழிந்து கிடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?!

    2 நாளைக்கு ஒருமுறைதான் லாரி தண்ணி வருது. அதுக்கே உன்னை புடி என்னைபுடின்னு சண்டை.. கிடைக்கிற 2 குடம் தண்ணிக்காக ராத்திரியெல்லாம் தூக்கம் கெட வேண்டியிருக்கு.

    வீட்டில இருக்கிற ஆண்களுக்கு பைக் எடுத்துட்டு போய் தண்ணி கொண்டுவரவே நேரம் சரியா இருக்கு. இந்த தண்ணீர் பஞ்சத்தில் ஆங்காங்கே வெட்டு குத்து, அடிதடியும் நடந்து வருகிறது. கடைசியில் ரயில்ல தண்ணி கொண்டு வர்ற நிலைமையும் வந்தாகிவிட்டது!

    காலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்! காலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

    பருத்திப்பட்டு

    பருத்திப்பட்டு

    மெட்ராஸில் இவ்ளோ பஞ்சத்துக்கு நடுவிலயும், ஒரே ஒரு இடத்துல மட்டும் தண்ணீர் நிறைந்து வழிகிறது. அது வேறு எங்குமில்லை.. சமீபத்தில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரிதான் நீர்நிறைந்து செழிப்பாக காணப்படுகிறது.

    அமைச்சர் பாண்டியராஜன்

    இதை பசுமை பூங்காவாகவே மாற்றிவிட்டார் அமைச்சர் மாபா பாண்டியராஜன். இது அவரது சொந்த தொகுதி. ஏற்கனவே இந்த தொகுதிக்கு பாண்டியராஜன் நிறைய செய்து வருகிறார். தொகுதி மக்களுக்கும் இவர் மீது எப்போதுமே தனிப்பிரியம் உண்டு.

    நீர் ஊற்று

    நீர் ஊற்று

    மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார் அமைச்சர். அதனால் புதிய சுற்றுலா தளமாகவே இந்த பகுதி காணப்படுகிறது ஒரு பக்கம் நீர், மறுபக்கம் பசுமை பொங்கும் பூங்கா, இதற்கு நடுவில் நீர் ஊற்று எனப்படும் ஃபவுன்டெயின் என அமர்க்களப்படுகிறது ஏரி.

    சோலைகள்

    சோலைகள்

    ஏரிக்கு செல்ல ஒரு தனிபாதை, அது பாலம் போலவே அமைக்கப்பட்டுள்ளது இன்னும் ஸ்பெஷல். அதில் நின்றுகொண்டு பார்த்தால், ஏரியின் மொத்த வியூ-வும் நமக்கு தெரியும். அதுவும் ராத்திரியில் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்கிறது இந்த பகுதி. 28 கோடி ரூபாயில் உருவான இந்த பூங்காவை முதல்வர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். நம்ம மெட்ராஸில்.. இப்படி ஒரு இடமான்னு ஆச்சரியமாவும் இருக்கு.. ஏரி நிறைய தண்ணியை பார்த்தால் ஆசையாவும் இருக்கு!

    ஏரிகள், குளங்கள்

    ஏரிகள், குளங்கள்

    உண்மையிலேயே பாண்டியராஜனை வாயார பாராட்டலாம். இதேபோல சென்னையிலும், சென்னைக்கு வெளியிலுமாக உள்ள ஏரிகளையும், மாநிலம் முழுவதும் உள்ள குளம், கண்மாய்கள், நீர் நிலைகளை அழகுபடுத்தி நீர் சேமித்து பாதுகாத்தால் எப்படி இருக்கும்.. மனசு வைங்க மக்களே, அரசுகளே.

    English summary
    Rs 28 Crore Green Park at Avadi Cotton Lady has opened by CM Edapadi Palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X