• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஓபிஎஸ்கூட இப்படி சொல்லலியே.. யாருமே கேக்கலயே.. தேமுதிக போட்ட மாஸ் தீர்மானம் என்னன்னு பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000 வழங்கவேண்டுமென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அநேகமாக இன்னும் 2 மாதத்தில் இந்த தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த தேர்தலில் தேமுதிகவும் களமிறங்க தயாராகி வருகிறது.. தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க தேமுதிகவின் மாவட்ட செயலாளர் கூட்டமும் இன்று நடைபெற்றது..

டெல்லியில் இருந்து வந்த அவரச அழைப்பு...புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் இருந்து வந்த அவரச அழைப்பு...புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

தேமுதிக

தேமுதிக

தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று ஏற்கனவே அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்... இதனையடுத்து ஏராளமானோர், விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்... மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.. அந்த தீர்மானங்களை அறிக்கையாகவே தேமுதிக வெளியிட்டுள்ளது.. அந்த தீர்மானங்கள் இவைகள்தான்:

 தீர்மானம்: 1

தீர்மானம்: 1

2021-ம் ஆண்டில் கொடிய நோயான கரோனா தாக்கத்தினாலும், உடல்நலக் குறைவினாலும் இயற்கை எய்திய தேமுதிக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சிவமுத்துக்குமார், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொருளாளர் முஜிபூர் ரஹ்மான், தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன், மேற்கு சென்னை மாவட்டத் தொண்டர் அணிச் செயலாளர் செல்வமணி, இதுபோன்று தமிழகம் முழுவதும் இயற்கை எய்திய தேமுதிக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

 தீர்மானம்: 2

தீர்மானம்: 2

வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதம் ஏற்பட்டு, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆகையால் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

 தீர்மானம்: 3

தீர்மானம்: 3

தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக அரசு ஆண்டுதோறும் பரிசுப் பொருட்களும், பணமும் வாடிக்கையாக வழங்கும், அதேபோல் இந்த ஆண்டும் தைப்பொங்கலுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்.

 தீர்மானம்: 4

தீர்மானம்: 4

தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகள். கல்வி கற்கும் குருவே இச்சம்பவத்தில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம், இதில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.

 தீர்மானம்: 5

தீர்மானம்: 5

2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து உலகம் முழுவதும் கரோனா தாக்கம் ஏற்பட்டுப் பல தொழில்கள் அதிகம் நஷ்டம் ஏற்பட்டு, பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள். இந்தக் கரோனாவால் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்கள் மாண்டு இருக்கிறார்கள். இப்பொழுது ஒமைக்ரான் புதியவகை உருமாற்ற கரோனா பல நாடுகளில் தொற்று ஏற்பட்டு, அதிகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

 பரிசோதனைகள்

பரிசோதனைகள்

எனவே ஒமைக்ரான் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதனை செய்தால் மட்டும் போதாது, அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் மட்டுமே தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது, கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொள்வது, கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தம் செய்வது போன்றவற்றை மக்களுக்குத் தெளிவாக வலியுறுத்தி, அதைப் பின்பற்றுகிற முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடுமையான பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

 தீர்மானம்: 6

தீர்மானம்: 6

முல்லைப் பெரியாறு அணை மட்டம் 152 அடி உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், கேரள அரசு தொடர்ந்து பொய்ச் செய்தியாக அணை வலுவிழந்துள்ளது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசு முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடி உயர்த்துவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்.

 தீர்மானம்: 7

தீர்மானம்: 7

பெட்ரோல், டீசல் விலை என்பது கச்சா எண்ணெய் விலையால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உடனே பெட்ரோல், டீசல் உயர்கிறது. இந்த விலை ஏற்றத்தால் கட்டுமானப் பொருட்கள் சிமெண்ட், ஜல்லி, மணல், கம்பி, காய்கறிகள் போன்ற அனைத்து விலைகளும் கடுமையாக உயர்கின்றன. தற்போது கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துகொண்டு இருக்கின்ற நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலையைக் குறைக்க அரசாங்கம் கண்காணித்து மக்களைக் கடுமையான பாதிப்பில் இருந்து காப்பாற்றிட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தீர்மானம்: 8

தீர்மானம்: 8

பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, தண்ணீர் தேங்குதல் ஏற்படுகிறது. வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தேக்கிவைத்துக் கொள்ளவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை . பிற்காலத்தில் இதுமாதிரி மழைக் காலங்களில் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்கின்ற வகையில் தடுப்பணைகள் உருவாக்கி, நீர் வீணாகாமல் தடுத்திடவும், நீர்நிலைகள், குளம், குட்டை, ஏறி, ஆறு போன்றவற்றைத் தூர் வாரி, தண்ணீரைப் பாதுகாக்க அதற்குண்டான திட்டங்களைச் செயல்படுத்தவும்.

 தீர்மானம்: 9

தீர்மானம்: 9

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமாகப் பணப் பட்டுவாடா செய்தார்கள். அதுபோன்று இந்தத் தேர்தலில் நடக்கா வண்ணம் மாநிலத் தேர்தல் ஆணையம் மிக கவனமுடன் உரிய பாதுகாப்போடு நடத்த வேண்டும் என ஒன்பது தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன" என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்த தீர்மானங்களில், தைப்பொங்கலுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என்ற தீர்மானம் பெரும்பாலானோரின் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. ஏனெனில் 4 நாட்களுக்கு முன்புதான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழக முதல்வரிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே 2500 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், விஜயகாந்த்தின் தேமுதிக 3000 ரூபாய் வேண்டுகோள் விடுத்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது.

English summary
Rs 3000 pongal parisu for Tamilnadu people, Vijayakanths DMDK Resolution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X