சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... 'ஆயிரத்தில் ஒருவன்' எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ரூ. 6.88 கோடியை செலவிட்ட தமிழக அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தமிழக அரசு செலவழித்த தொகை மலைக்க வைப்பதாக உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 17/01/2018 முதல் இந்த 17/01/2019 வரை ஓர் ஆண்டாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான மொத்த செலவு 6 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஆகும். மதுரையில் ரூபாய் 48,73,497-ம் சென்னையில் கடைசியாக நடந்த விழாவிற்கு மிக அதிகபட்சமாக 1,99,86,639-ம் செலவு செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Rs.6.88 crore Expenses For MGR centenary Fest

இது குறித்து ஆர்டிஐ ஆர்வலரும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனருமான ஹக்கீம் கூறுகையில், தமிழக அரசு கடந்த ஓர் ஆண்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்று ஒரு விழாவினை அரசு விழாவாக அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் கொண்டாடினர்.

Rs.6.88 crore Expenses For MGR centenary Fest

அப்படி கொண்டாடப்பட்ட அந்த நூற்றாண்டு விழா என்பது முற்றிலும் அரசு பணத்தில் செலவு செய்யப்பட்ட அரசு விழாவாக இருந்தது. அந்த அரசு விழாவிற்கு மக்களுடைய வரிப் பணம் எவ்வளவு செலவாகிறது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட பொழுது 6 கோடியே 88 லட்சம் ரூபாய் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மாவட்ட தலை நகரங்களில், இந்த நிகழ்ச்சிக்காக செலவு செய்யப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

Rs.6.88 crore Expenses For MGR centenary Fest

இப்படி மக்களுடைய வரிப் பணத்தின் வாயிலாக 32 மாவட்டங்களில் கொண்டாடப்பட்டதற்கான செலவு 6 கோடியே 88 லட்சம். தமிழகம் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற செலவுகள் அவசியம்தானா என்பது எங்களைப் போன்றவர்களின் கேள்வி. இதனை தமிழக அரசு உணர வேண்டும் என்றார்.

Rs.6.88 crore Expenses For MGR centenary Fest
English summary
TN Govt has spent Rs 6.88 crore for MGR Centenary festival in all over Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X