சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை

Google Oneindia Tamil News

சென்னை: 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நஷ்டத்தில் அரசு போக்குவரத்துத் துறை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட ரூ.2,109 கோடி கூடுதல் நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது என போக்குவரத்து கழகம் வெளியிட்ட 2017-18 ஆண்டுக்கான அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 7,304 crore lost; Government Transport Department report

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், நெல்லை, கோவை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இவை தவிர சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்தித்தன் காரணமாக, 6 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் அரசு போக்குவரத்து கழகமானது 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017 - 18ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2 ஆயிரத்து 109 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கிய கடன் தொகை 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Government Transport running at a loss of Rs. 7 thousand 304 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X