சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி

ஆர்எஸ் பாரதி கைது நடவடிக்கைக்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "பழங்குடியின மாணவனை தனது செருப்பை கழற்ற சொல்லி இழிவுபடுத்திய பிரச்சினையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்ய அதிமுக அரசு மறுத்துவிட்டது... ஆனால், ஆர்எஸ் பாரதி, தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை என்று சொல்லியும், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டும் அவரை கைது செய்தது நேர்மையற்ற செயலாகும்" என்று காட்டமான கண்டனத்தை கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    R.S.Bharathi Arrested For His Controversial Speech | ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் கைது

    ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

     rs bharathi arrest: cpim balakrishanan slams aiadmk government

    "திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னால் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

    சாதிய ரீதியாக யாரையும் இழிவுபடுத்துகிற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்து வரும் நிலையில் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

    சமீபத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின மாணவனை தனது காலணியை கழற்றச் சொல்லி இழிவுபடுத்திய பிரச்சினையில் அமைச்சர் வருத்தம் தெரிவித்துவிட்டார் என வழக்குப் பதிவு செய்ய அதிமுக அரசு மறுத்துவிட்டது.

    ஆனால், ஆர்.எஸ்.பாரதி, தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனவும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிட்ட நிலையில் அவரைக் கைது செய்தது நேர்மையற்ற செயலாகும்.

    தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர் கதையாகி வருகின்றன. சாதிய ஆணவக் கொலைகள் நின்றபாடில்லை. இத்தகைய கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தல்களை எடப்பாடி பழனிசாமி அரசு கிடப்பிலே போட்டு வருகிறது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது.. இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது.. இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

    தீண்டாமைக் கொடுமைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள முதல்வர் தலைமையிலான தீண்டாமை ஒழிப்புக்குழு பல ஆண்டுகளாக கூடவில்லை. மாவட்டங்களிலும் இத்தகைய குழு செயல்படவில்லை.

    நடைமுறையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கிடப்பிலே போட்டுவிட்டு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கோடு இச்சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்வது, சிறையிலடைப்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கே விரோதமானதாகும்.

    மேலும், ஏற்கெனவே பெண்களையும், நீதித்துறையையும், பத்திரிகையாளர்களையும், காவல்துறையினரையும் அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள மறுத்த அதிமுக அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நோக்கம் என்பதைத் தவிர வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    rs bharathi arrest: cpim balakrishanan slams aiadmk government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X