சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. சிங்கம் நடந்து போச்சா.. நம்ம ஹார்பர்லயா.. என்னங்கடா டேய்.. இப்படி கிளப்பி விடறீங்க!

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சிங்கம் நடமாட்டம் என புரளி கிளம்பியது

Google Oneindia Tamil News

சென்னை: என்னப்பா சொல்றீங்க.. நம்ம ஹார்பர்ல சிங்கம் நடந்து போச்சா? என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டு வருகின்றனர் சென்னைவாசிகள்!

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குள் வெளிநாட்டு கண்டெய்னரில் ஒரு சிங்கம் வந்துவிட்டதாம்.. அந்த சிங்கம் கண்டெய்னர் வழியாக நடந்து போனதாம்.. இதுதான் இன்றைய சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்!!

"சென்னை எண்ணூர் அடுத்துள்ளது காட்டுப்பள்ளி துறைமுகம்.. இந்த துறைமுகத்திற்குள் ஒரு பெண் சிங்கம் குட்டிகளுடன் நடமாடுகிறது.. யாரும் அங்கே போகாதீங்க.." என்று இன்று காலை முதலே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் ஒரு தகவல் பரவியது.

14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்! 14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்!

பதறிவிட்டனர்

பதறிவிட்டனர்

மேலும் இது சம்பந்தமான போட்டோ, வீடியோவும் அதில் பதிவாகி இருந்தது... ஹார்பரில் நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய கண்டெய்னர் அருகில் ஒரு சிங்கம் நடந்து போவது போலவும், அதற்கு பக்கத்திலேயே சிங்கம் குட்டிகளும் நடமாடுவது போலவும் இருந்தது.. இதை பார்த்ததும் எல்லோருமே பதறி விட்டனர்.. காட்டு தீ போல இந்த செய்தி, வீடியோவும் வைரலானது.

விஷமவாதிகள்

விஷமவாதிகள்

ஆனால், இது ஒரு புரளி என்று பிறகுதான் தெரியவந்தது.. குஜராத் மாநிலம், பிபாவாவ் என்ற ஹார்பர் பகுதியில் போன வாரம் எடுத்த வீடியோவாம் இது.. இதை ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிடவும், அதை அப்படியே உல்டாவாக மாற்றிவிட்டனர் நம்மூர் விஷமவாதிகள் சிலர்.. இந்த போட்டோவுடன், விபத்தில் அடிப்பட்டு ரத்தகாயத்துடன் போராடிய இளைஞர் ஒருவரின் போட்டோவையும் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை போல சித்தரித்து விட்டனர்!

பரபரப்பு

பரபரப்பு

இதுதான் பரபரப்பை தந்துவிட்டது... உண்மையிலேயே, பிபாவாக் ஹார்பர் பக்கத்தில்தான் காட்டுப் பகுதி இருக்குமாம்.. அதனால் அடிக்கடி நிறைய விலங்குகள் இரைதேடி குட்டிகளுடன் நடமாடுமாம்.. அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படி அம்மாநில மக்களுக்காக வெளியிட்டிருந்தனர்.. இந்த போட்டோவைதான் உருவி... சென்னை ஹார்பரில் சிங்க நடமாட்டம் என்று சென்னையில் திரித்து விட்டனர்.

விளக்கம்

விளக்கம்

எனினும், இதெல்லாம் வதந்தி என்று நம் சென்னை போலீசார் விளக்கமாக தெரிவித்து விட்டனர். எனவே ஃபார்வர்டு செய்யப்படும் செய்திகளையும் மொத்தமாக அப்படியே உள்வாங்கி கொள்ளாமல், அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து விழிப்புடன் இருந்தால்தான், இதுபோன்ற விஷமிகளுக்கு நம்மால் முடிவு கட்ட முடியும்!!

English summary
rumors spread about lion walking with its cut in chennai kattupalli harbour
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X