சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்!

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர்.

தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அவர், இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர். நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயர காரணம் நம் குடும்பம். அதன் மையமாக இருக்கும் நபர்தான் பெண்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டன. பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்களைதான் நாம் தெய்வமாக மதித்து வந்துள்ளோம்.

பெண்மை எப்படி

பெண்மை எப்படி

பெண்மை இல்லாத பெண்களை நாம் தெய்வமாக வணங்க மாட்டோம். அவர்களை அப்படி என்னால் ஏற்க முடியாது. விஞ்ஞானப்படி அப்படி சொல்லவும் முடியாது. நாம் கடந்த வருடங்களாக பெண்களிடம் பெண்மையை இழந்து வருகிறது. எனக்கு இது வருத்தம் அளிக்கிறது .

அனுபவம் என்ன

அனுபவம் என்ன

என்னைப் பொறுத்தவரை, நான் அனுபவப்பட்டது, இந்திய பெண்கள் மற்ற நாட்டு பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது, அவர்களின் சூழ்நிலை மிக முக்கியமானது என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

எஸ். குருமூர்த்தியின் இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசிவிட்டார் என்று இணையத்தில் அவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

English summary
S Gurumurthy speech about women in Chennai makes new controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X