• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிமுகவில் மீண்டும் புயலை கிளப்பிய எஸ்.ஆர்.பி... ஓ.பி.எஸ்.மகனோடு லடாய்.. வெடிக்கும் சர்ச்சை..!

|

சென்னை: புதிய வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் அதிமுகவில் நிலவும் உச்சகட்ட உட்கட்சி மோதலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்த கருத்து அவரது சொந்தக் கருத்து என்றும் கட்சிக் கருத்தல்ல எனவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் எதிர்வினையாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் வைகைச் செல்வன் சொல்வது தான் சொந்தக் கருத்தே தவிர தமது எதிர்ப்பு சொந்தக் கருத்துக் கிடையாது என சிக்ஸர் அடித்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.

மேலும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகனும், தேனி எம்.பியுமான ரவீந்தரநாத்துக்கு அனுபவம் போதாது எனவும் விமர்சித்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.

அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்...? முதலமைச்சர் வேட்பாளர் இ.பி.எஸ்...? முடிவுக்கு வரும் மோதல்..!

பழுத்த அரசியல்வாதி

பழுத்த அரசியல்வாதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடியாக திகழ்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கிய போது அவரை நம்பி தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவியை கொடுத்தார் ஜி.கே.வாசன். இந்நிலையில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டாம் என ஜி.கே.வாசனுக்கு எடுத்துரைத்தார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன். கூடவோ குறைத்தோ அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நமது வேட்பாளர்களை நிறுத்துவோம் என வாசனிடம் மன்றாடினார்.

அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இணைந்தார்

ஆனால் தனது ஆலோசனை, அறிவுரையை மீறி மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்ததால் அவர் மீதான கோபத்தில் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர்.பி. இருந்ததால் அவர் மீது ஜெ.வுக்கு எப்போதுமே மரியாதை இருந்து வந்தது. இந்நிலையில் அவர் அதிமுகவில் சேர்ந்த சில மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராக்கி கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அணி சேராமல்

அணி சேராமல்

இதனிடையே ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அணி சேரா நபராக அதிமுகவில் வலம் வந்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என எந்த அணியுடனும் நெருக்கம் காட்டாமல் ராஜ்யசபா உறுப்பினருக்கான கடமையை மட்டும் நிறைவேற்றி வருகிறார். மத்திய அமைச்சர், மாநில தலைவர் என காங்கிரஸில் உயர் பதவியை வகித்த அவரால், அரசியலில் ஜூனியர்கள் கட்டளைப்படி நடக்க விருப்பமில்லை.

ராஜ்யசபா

ராஜ்யசபா

முத்தலாக் தடை மசோதா கொண்டுவரப்பட்ட போது அவையில் ஆதரித்துவிட்டு அவைக்கு வெளியே பேட்டியளித்த போது முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். வேறுவழியின்றி கட்சியின் முடிவு என்பதால் தாம் ஆதரித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய வேளாண் மசோதாவை பொறுத்தவரை அவையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

தனிக்கருத்து

தனிக்கருத்து

இதனிடையே மாநிலங்களவையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் முன் வைத்த கருத்து அவரது தனிக்கருத்தாக இருக்கலாம் என்றும் கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல எனவும் எதிர்வினையாற்றி இருக்கிறார் வைகைச்செல்வன். இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள எஸ்.ஆர்.பி. வைகைச் செல்வன் கூறுவது தான் சொந்தக் கருத்து என பதிலடி கொடுத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற விவாதங்களில் ஓ.பி.ரவீந்தரநாத் போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் விமர்சித்திருக்கிறார்.

தொடரும் லடாய்

தொடரும் லடாய்

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் என்ன பேச வேண்டும், யார் பேச வேண்டும் என்பன பற்றியெல்லாம் சிறப்பு வகுப்பே எடுத்து அனுப்புவார். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்களை அதிமுக உறுப்பினர்களில் சிலர் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தொடர்கதையாகி விட்டது. இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால், முத்தலாக் தடை சட்டத்தை அன்வர் ராஜா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அப்போதிருந்த மற்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி வாய்திறக்கவில்லை. அதேபோல் இப்போது புதிய வேளாண் மசோதாவை எஸ்.ஆர்.பி. எதிர்த்திருக்கிறார். துணை முதல்வர் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
S.R.Balasubramanian Mp create storm in AIADMK again
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X