சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த் சொந்த புத்தியுடன் செயல்படவில்லை என மனைவியே சொல்வது சரியல்ல- திருநாவுக்கரசர் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் இடையே சட்டசபையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் திமுக என கூறி விஜயகாந்தை பிரேமலதா கேவலப்படுத்திவிட்டார் என திருச்சி எம்பி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக , தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

கண்ணின்மணி கண்ணின்மணி கதை கேளம்மா.. ராஜா கிட்ட நிறைய கத்துக்கணும்.. நெகிழும் தீனா கண்ணின்மணி கண்ணின்மணி கதை கேளம்மா.. ராஜா கிட்ட நிறைய கத்துக்கணும்.. நெகிழும் தீனா

பிரச்சினை

பிரச்சினை

அவர் பேசுகையில், ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் என்ன நடந்தது என பல பேருக்கு தெரியாது. அதை புரிய வைக்க கடமைப்பட்டுள்ளேன். சட்டசபையில் நடந்த மிகப் பெரிய பிரச்சினைக்கு பின்னால் திமுகவின் சூழ்ச்சி இருந்தது.

வார்த்தைகள்

வார்த்தைகள்

எதை சொன்னால் கேப்டன் உணர்ச்சிவசப்படுவார். எப்படி நடந்துகொண்டால் ஜெயலலிதா கோபப்படுவார் என்பதை தெரிந்து கொண்டு ஜெயலலிதாவை எரிச்சலூட்டுகிற மாதிரியான வார்த்தைகளை விஜயகாந்தை விட்டு பேச வைத்தனர்.

கேவலம்

கேவலம்

அதிமுக- தேமுதிக கூட்டணியை பிளவுப்படுத்த வேண்டுமென்று துரோகிகளை வைத்து சட்டசபையில் சதி செய்து கூட்டணியை முறிக்க செய்தனர் என பிரேமலதா பேசியுள்ளார். இதுகுறித்து எஸ்.திருநாவுக்கரசர் கூறுகையில் சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட மோதல் திமுக செய்த சூழ்ச்சி என கூறியதன் மூலம் பிரேமலதா விஜயகாந்தை கேவலப்படுத்திவிட்டார்.

இழிவுப்படுத்தும் செயல்

இழிவுப்படுத்தும் செயல்

விஜயகாந்த் சுயமாக சிந்தித்து சுயமாக செயல்பட்டதே இல்லை என பிரேமலதா கூறுகிறாரா. மனைவியே அவர் சொந்த புத்தியுடன் செயல்படவில்லை என கூறுவது சரியல்ல. இது அவரது கணவரையே இழிவுப்படுத்தும் செயல்.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரால் பேச முடியாது என்பதால் இது போல் பொய்யான தகவல்களை பிரேமலதா பரப்பக் கூடாது. இது போன்ற விமர்சனங்களை பிரேமலதா பிற்காலங்களில் தவிர்க்க வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.

English summary
Trichy Congress Candidate S. Thirunavukkarasar says that Premalatha's comment that DMK was in behind the clash between Jayalalitha and Vijayakant in assembly is not good one. She is teasing Vijayakant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X