சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக மாநிலத் தலைவர் பதவி இல்லை.. தேசியத் தலைவராக்கினால் கூட ரஜினி ஏற்க மாட்டார்.. திருநாவுக்கரசர்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில தலைவர் பதவி இல்லை, தேசிய தலைவர் பதவி கொடுத்தாலும் ரஜினி ஏற்பது சந்தேகம்தான் என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் தொடங்கவில்லை.

இந்த நிலையில் தமிழக இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் ரஜினி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தங்கள் இலக்கு 234 தொகுதி சட்டசபை தேர்தல்தான் என ரஜினி கூறிவிட்டார்.

என் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்!என் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்!

பாஜக தலைவர்

பாஜக தலைவர்

இவர் கட்சியை தொடங்குவார், தொடங்கமாட்டார் என்ற வாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும். தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்திரராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பெயர்கள்

பெயர்கள்

தமிழகத்தில் பாஜக காலூன்ற தமிழகத்தில் ஒரு வலுவான தலைவரை நியமிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் பாஜக தலைவர் ரேஸில் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பெயர்கள் உள்ளன.

புகழ்

புகழ்

ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ரஜினிகாந்தின் பெயரும் அடிபடுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் ரஜினி நெருக்கம் காட்டுவதும் புகழ்ந்து பேசுவதும் என கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இது குறித்து திருச்சி லோக்சபா எம்பியும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ் திருநாவுக்கரசரிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சீரியஸ்

சீரியஸ்

அப்போது அவர் கூறுகையில் பாஜகவில் உறுப்பினராக இல்லாத ஒருவரால் எப்படி அக்கட்சியின் மாநில தலைவராகிவிட முடியும். ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினரே இல்லை. பின்னர் எப்படி தலைவராக முடியும். மாநில தலைவர் பதவி என்றில்லை, தேசிய தலைவர் பதவியை கொடுத்தாலும் கூட அவர் ஏற்க மாட்டார். எனவே இதெல்லாம் வேடிக்கையானவை, நான் சீரியஸாக பார்க்கவில்லை என்றார் திருநாவுக்கரசர்.

English summary
Trichy MP and Rajini's close friend S. Thirunavukkarasar says that Rajinikanth will never accept BJP's State President post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X