சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசியக்கொடியை அவமதித்த எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் - ஹைகோர்ட்டில் போலீஸ் தகவல்

தேசியக்கொடி அவமதிப்பு செய்த வழக்கில் எஸ் வி சேகர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் காவல் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்யப்பட மாட்டார் என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் வி சேகர் மன்னிப்பு கேட்பதற்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

S Ve Shekhar apologize for insulting national flag - Police says High Court

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ் வி சேகர் மீண்டும் ஆஜர் தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ் வி சேகர் மீண்டும் ஆஜர்

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலமைச்சர், தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், எஸ்.வி சேகர் சம்மந்தமின்றி காவி நிறம் இந்துத்துவத்தை குறிக்கும், வெள்ளை நிறம் கிறிஸ்துவத்தை குறிக்கும், பச்சை நிறம் இசுலாமியத்தை குறிக்கும் என அவர் சம்மந்தமின்றி ஒரு விளக்கம் கொடுப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கொடியின் மூன்று நிறங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள போது எஸ்.வி சேகர் மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளதாக
குற்றம்சாட்டினார்.

மேலும், தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கோரி எஸ் வி சேகர் மனுத்தாக்கல் செய்தால் கைது செய்யப்பட மாட்டார் காவல்துறை உத்திரவாதம் அளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 2 வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

English summary
Police told the high court that S Ve Shekhar would not be arrested if he apologized for insulting the national flag. The court has given S Ve Shekhar till September 2 to apologize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X