சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை படிக்கிறதுக்குள்ள கொரோனாவே உலகத்தை விட்டு போய்டும்.. எஸ் வி சேகர் கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி, படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமலின் கடிதம் குறித்து எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளார்.

Recommended Video

    A facebook post doing viral , Manmohan has taken firm decision against US

    கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவினால் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. வீட்டு வேலைகளை செய்து வந்தோர் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஊதியம் இல்லாமல் அடுத்த வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த நிலையில் ஏழை மக்களின் இன்னல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில் அவர் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் அமல்படுத்தியது, அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத ஏழைகளை விளக்கேற்ற சொன்னது, பணமதிப்பிழப்பை போல் இந்த நடவடிக்கையால் மக்கள் அவதிப்படுவது உள்ளிட்டவற்றை தொகுத்து 3 பக்கங்களை கொண்ட கடிதத்தை எழுதியுள்ளார். மிகவும் காட்டமாக இருந்த கடிதத்தை பெரும்பாலானோர் பாராட்டினர்.

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை விமர்சித்து பதிவு போட்டுள்ளார். அதில் கமலின் லெட்டரை டேக் செய்து "இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

    குடிமக்கள்

    குடிமக்கள்

    இது போல்பாஜகவில் இணைந்துள்ள நடிகை காயத்ரி ரகுராம் நேற்று முன் தினம் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நீங்கள் ஏன் சீன அதிபருக்கு எழுதவில்லை. ஏன் தப்லீகீ ஜமாத்துக்கு எழுதவில்லை. ஏன் அவர்களது தோல்வியை சுட்டிக் காட்டக் கூடாது? அரசின் உத்தரவை மதிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள்.

    எழுதினால் என்ன

    தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்தார்கள் என கூறுகிறீர்களா, தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு பிரச்சினை இருந்தால் முதலில் மாநில அரசுக்கு எழுதுங்கள் என கேட்டிருந்தார். இந்த நிலையில் இந்திய பிரஜை இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதாமல் சீன அதிபருக்கு ஏன் எழுத வேண்டும் என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    English summary
    BJP activist S Ve Shekher teases Kamal Haasan's letter to PM Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X