சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக வாக்குகளை தடுப்போம் என்ற சீமான் பேச்சுக்கு.. எஸ்.வி.சேகர் "டபுள் மீனிங்" பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு கிடைக்காமல் போக வேண்டும் என்றால் அதற்கு சீமான் எங்களை ஆதரித்தால் போதும் என எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரும்பாலான மாநிலங்களில் , குறிப்பாக தமிழகத்துக்கு மக்கள் விரோத திட்டங்களையே கொண்டு வந்துள்ளது. இதனால் அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்படவுள்ளது. இதையொட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணியை அமைக்க பேரம் பேசி வருகின்றன.

போடாட்டி பரவாயில்லை

போடாட்டி பரவாயில்லை

இதனிடையே பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என சில கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன. அதிலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோ, எங்களுக்கு ஓட்டு போடாட்டியும் பரவாயில்லை.

டுவிட்டரில்

டுவிட்டரில்

நாங்கள் உங்களை ஒன்றும் கேட்க மாட்டேன். ஆனால் பாஜகவுக்கு மட்டும் போடாதீர் என பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் மூத்த தலைவர் எஸ் வி சேகரும் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

எஸ் வி சேகர் கிண்டல்

இதுகுறித்து எஸ் வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் - சீமான். அதுக்கு ஒரே வழி சீமான் பாஜகவை ஆதரித்தால் போதும் என எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளார்.

நோட்டாவுடன் போட்டி

நோட்டாவுடன் போட்டி

இவர் என்னதான் கிண்டல் செய்தாலும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கே அதிக வாக்குகள் விழுந்தது. அது போல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு வந்த நிலையில் பாஜகவோ நோட்டாவுடன் போட்டி போட்டது என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

English summary
S.Ve Shekher says that Seeman propagandas about not to vote for BJP. Actually he comes for alliance with our party then we will lose automatically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X