சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செந்தில் பாலாஜி சொல்வது சரிதான்.. 10 ஆண்டில் மயிலாப்பூரில் பல தடவை மின் தடை.. ஆனால்.. எஸ் வி சேகர்

Google Oneindia Tamil News

சென்னை: அணிலால் மின்தடை ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது சரிதான். ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது என பாஜக நிர்வாகி எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதற்கு கடந்த ஆட்சியில் பராமரிப்பு இல்லாதது காரணம். மேலும் அணில்கள் கம்பிகள் மீது உட்காருவதாலும் மின்தடை ஏற்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதை பலரும் மீம்ஸ்களாக கிண்டல் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் அணில்கள் குறித்த கருத்துக்கு கிண்டல் செய்து வருகிறது.

அணிலை பிடிக்கணும்.. டார்கெட் செய்யப்படும் செந்தில் பாலாஜி.. அடுத்த லெவலுக்கு போன பாஜக அணிலை பிடிக்கணும்.. டார்கெட் செய்யப்படும் செந்தில் பாலாஜி.. அடுத்த லெவலுக்கு போன பாஜக

எஸ் வி சேகர்

எஸ் வி சேகர்

இந்த நிலையில் அமைச்சரின் கூற்று உண்மைதான் என பாஜக நிர்வாகி எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது தவறில்லை. ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது.

காகம்

காகம்

புறா, காக்கா போன்ற பறவைகள் டிரான்ஸ்பார்மர் பியூஸ் கம்பியில் அமரும் போது ஷார்ட் ஆகி மின் தடை ஏற்படும். அது அங்கேயே இறந்து விட்டால் மின் வாரிய ஊழியர்தான் வந்து சரி செய்ய முடியும்.

Recommended Video

    Corona 2nd Waveக்கு யார் காரணம்? விளாசும் S.ve Shekher!
     மயிலாப்பூரில் மின்தடை

    மயிலாப்பூரில் மின்தடை

    கடந்த10 ஆண்டுகளில் எங்கள் மயிலாப்பூர் ஏரியாவில் பல தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடனே சரி செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரிய பொறியாளர்களிடம் கேட்டு பாருங்கள். மின்சார வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

    மின்தடை

    மின்தடை

    அணில்கள் மின்தடையை ஏற்படுத்தும் என வெளிநாடுகளில் நடந்த சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அணில்களாலும் மின்தடை ஏற்படுகிறது.

    English summary
    S.Ve. Shekher says that Senthil Balaji is right, that Squirrels will cause power outage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X