சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பக் கூட அவங்கதான் இதை செஞ்சுக்கணுமா.. ரொம்ப சிறப்பான கொள்கை.. என்ன சொல்கிறார் எஸ்வி சேகர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ்.வி சேகர் பதிலடி | காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழு வாய்ப்பு?

    சென்னை: காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல் ராஜினாமா செய்தால் தென் மாநில தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வர் என்று ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எஸ் வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜகவின் எஸ்வி சேகர், எச் ராஜா இவர்கள் இருவரும் டுவிட்டரில் எதையாவது போட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டி கொள்வதும் இவர்களது வாடிக்கையாகும்.

    அந்த வகையில் எஸ் வி சேகர் டுவிட்டரில் ஒரு கருத்தை போட்டுள்ளார். எதைப் பற்றி என்றால் டெல்லி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை பற்றியது.

    ராஜினாமா

    ராஜினாமா

    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு கடும் தோல்வியுற்றது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்தார்.

     காங்கிரஸ் கட்சி

    காங்கிரஸ் கட்சி

    அவரது ராஜினாமா கடிதத்தை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனினும் ராகுல் பிடிவாதமாக இருந்துள்ளார். இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூடியது.

     முடிவை கைவிட்ட ராகுல்

    முடிவை கைவிட்ட ராகுல்

    அப்போது பேசிய ப.சிதம்பரம், நீங்கள் ராஜினாமா செய்யும் முடிவை கைவிடாவிட்டால் தென் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என கூறினார். இதையடுத்து ராகுல் தனது முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.

    சிறப்பான கொள்கை

    முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சை டேக் செய்து எஸ் வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அப்பகூட பைசா காசு சம்பாதிக்காத தொண்டன் தான் தற்கொலை செஞ்சுக்கணுமா. சிறப்பான கொள்கை என்று கூறியுள்ளார்.

    English summary
    S.Ve. Shekher tweets about P.Chidambaram's speech in Congress Working Committee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X