சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன்! ஜன 1 டூ டிச. 31 வரை லீவு கேளுங்க.. பசங்க உருப்படுவாங்க.. பொங்கல் லீவு குறித்து எஸ் வி சேகர்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதை கிண்டல் செய்து எஸ் வி சேகர் சர்ச்சை ட்வீட் செய்துள்ளார்.

வரும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முதல் நாளான நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

S.Ve. Shekher tweet controversial about pongal leave

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஏன் 14 ம் தேதி. ஜனவரி முதல் தேதி முதல் டிசம்பர் 31 வரை லீவு கேளுங்க. சம்பளம் வீடு தேடி வரும். ஆனா பசங்க உருப்படுவாங்க என நக்கலாக தெரிவித்துள்ளார்.

புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்- தடை செய்ய பாஜக வலியுறுத்தல்புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்- தடை செய்ய பாஜக வலியுறுத்தல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்துள்ளதை எஸ் வி சேகர் கிண்டல் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜகவின் கூட்டணியில் உள்ள பாமகவும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
S.Ve.Shekher tweets controversial about Pongal leave which was demanded on tomorrow by government staffs and teachers association.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X