சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சத்தியமா விடவே கூடாது".. சாத்தான்குளம் கொடுமைக்காக ரஜினியின் ரியாக்ஷன்.. வாசகர்கள் கருத்து இதுதான்!

சாத்தான்குளம் விவகாரத்தில் ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் லேட் என்று வாசகர்கள் கருதுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சத்தியமா விடக்கூடாது என்று சாத்தான்குளம் விவகாரத்தில்.. ஆவேசம் பொங்க.. கோபம் கொப்பளிக்க.. ஒருவாரம் கழித்து ரஜினி காட்டிய ரியாக்‌ஷன் ரொம்பவும் லேட் என்று மக்கள் ஆணித்தரமாக முடிவே செய்துவிட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.. தமிழகம் முதல் இந்தியா வரை கொந்தளித்து முடித்துவிட்டார்கள்.. பல அரசியல் கட்சி தலைவர்கள் சாத்தான்குளத்துக்கே சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொல்லி வந்துவிட்டார்கள்.

ஆனால், ஒரு வாரம் அமைதியாக இருந்தார் ரஜினிகாந்த்.. இதற்கான காரணமே இப்போது வரை தெரியவில்லை.. எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்து கொண்டார் என தெரியவில்லை.

கொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்கொரோனா கெடுபிடி தளர்வு: ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்- சென்னை ஹைகோர்ட்

 லேட் ரியாக்‌ஷன்

லேட் ரியாக்‌ஷன்

எல்லாவற்றிலும் லேட்டாக கருத்து சொல்பவர் என்ற பெயர் அவருக்கு ஏற்கனவே உள்ள நிலையில், இந்த விவகாரத்துக்கும் லேட்டாகவே வந்து கண்டித்தார். எனினும் இதை நாம் வரவேற்கலாம். அதேசமயம், அந்த கண்டனம் யாருக்காக சொன்னார், எந்த தந்தை, எந்த மகனை சொன்னார், ஊர், பேர் இல்லாமல் இப்படி கண்டனம் சொல்வதை விட சொல்லாமலே இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டனர்.

ஆவேசம்

ஆவேசம்

ரஜினி கண்டனம் + அதற்கு சோஷியல் மீடியாவின் கமெண்ட்களை வைத்து நாம் ஒரு கருத்து கணிப்பு வாசகர்களிடம் நடத்தினோம்.. "ஜெயராஜ்- பென்னிக்ஸ் சித்ரவதை கொலை.. கொன்றவர்களை சத்தியமா விடக் கூடாது என்று ரஜினிகாந்த் சொன்னது, "வரவேற்க கூடியது" என்று 30.06 சதவீதம் பேரும், "ரொம்ப லேட் ரியாக்‌ஷன்" என்று 69.94 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

 போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

அதாவது முக்கால்வாசி பேர் இந்த லேட் ரியாக்‌ஷனை ஏற்கவில்லை.. இதை நாம் சாத்தான்குளம் சம்பவத்துக்கு என்று மட்டும் எடுத்து கொள்ள முடியாது.. எப்படியும் ரஜினி கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்றும், அவருடன் கூட்டணி வைக்க அரசியல் புள்ளிகள் 3 பேர் போயஸ் கார்டன் பக்கம் அடிக்கடி சென்று வருகிறார்கள் என்றும் சலசலப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

 உடனடி வரவேற்பு

உடனடி வரவேற்பு

ஒருவேளை, கட்சியை தொடங்கினாலும் சரி, அல்லது அரசியலின் தீவிரத்தில் இறங்கினாலும் சரி, இதுபோன்ற தாமதமான கருத்துக்களை உதிர்ப்பது பின்னடைவாக பார்க்கப்படும்.. மக்கள் ஆவேசமும், கொந்தளிப்பில் இருக்கும்போது, அந்த உணர்விலும் உடனடியாக பங்கெடுப்பதே அரசியல் தலைவர்களுக்கு வரவேற்பை பெற்று தரும்.. மக்களிடம் நெருங்கும் வாய்ப்பும் இதுதான்.

 சேஃப்டி அரசியல்

சேஃப்டி அரசியல்

எல்லாரும் கருத்து சொன்ன பிறகு வந்து, நாமளும் ஒரு கருத்தை சொல்லி வைப்போம் என்பதும், அந்த கருத்தையும் யாருக்குமே வலிக்காமல் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போவதும் வழக்கம்போல சேஃப்டி அரசியலாகவே பார்க்கப்படும்!

English summary
saathankulam death: actor rajinikanths late reaction
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X