சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரத்த கறையா இருந்ததே.. அது எப்படி? விடிய விடிய அடித்திருக்க வேண்டும்.. "லாக்கப்" கதாசிரியர் சந்தேகம்

சாத்தான்குளம் விவகாரம் குறித்து விசாரணை பட நாவலாசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எப்ஐஆர் அறிக்கை ஒன்று சொன்னால், சிசிடிவி காட்சிகள் வேறு ஒன்றை காட்டுகிறது.. சரி, இந்த சிசிடிவியை கூட, விட்டுவிடுங்கள், ஸ்டேஷனில் டேபிளில் ரத்தக் கறைகள் இருந்ததே, அது எப்படி? போலீசார் கால்களையும் கைகளையும் கட்டி, டேபிளில் வைத்துதான் மணிக்கணக்கில் அடித்திருக்க வேண்டும்.. அந்த அறிக்கையில், பென்னிக்ஸ் தலையில் பல காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.. ஜெயராஜின் லுங்கியும், பென்னிக்ஸின் பேன்ட்டும் முழுசா ரத்தத்தில் நனைந்திருக்கிறது.. கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கு" என்று விசாரணை பட கதாசிரியர் சந்திரகுமார், சாத்தான்குளம் சம்பவம் பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சந்திரகுமார்.. இவர் ஒரு நாவலாசிரியர்.. 58 வயதாகிறது.. 1983-ல், குண்டூரில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. இவரை ஒரு கொள்ளை கும்பலின் தலைவன் என்று கருதி, போலீசார் கைது செய்து லாக்அப்பில் வைத்தனர்.. பல கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளானார்.. பிறகு ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

saathankulam death: novelist chandrakumar says about tn custodial deaths case

இதையடுத்து, தனக்கு சிறையில் நேர்ந்த அனுபவத்தை லாக்கப் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.. இந்த கதைதான், விசாரணை என்ற படமாகவும் மாறியது... படம் வெளிவந்தவுடன் பரபரப்பாக பேசப்பட்டது.. அதற்கு காரணம் படத்தில் அமைந்திருக்கும் லாக்-அப் கொடூரங்கள்தான்.

அந்த படத்தில் நடந்ததைபோலவேதான் சாத்தான்குளம் சம்பவத்திலும் நடந்ததாக பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சந்திரகுமார் ஒரு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அதில் தன்னுடைய லாக்கப் கதையையும், சாத்தான்குளம் சப்-ஜெயிலில் நடந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு தன் கருத்தை சொல்லி உள்ளார். அதன் சுருக்கம் இதுதான்:

"தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டபோது தான் ரொம்பவும் ஷாக் ஆயிட்டேன்.. மறுநாள் காலையில் 2 பேரும் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ​​ஜெயராஜின் லுங்கியும், பென்னிக்ஸின் பேன்ட்டும் முழுசா ரத்தத்தில் நனைந்திருக்கிறது.. கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கு.

அவர்கள் இறந்ததுமே 3 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட் நடவடிக்கையை ஆரம்பித்தது.. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்... இந்த வழக்கு இப்போதைக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சாத்தான்குளம் சம்பவம் பற்றி கேட்டவுடனேயே ​​குண்டூர் ஸ்டேஷனில் நான் அனுபவித்த அந்த 13 நாட்கள் வேதனைதான் நினைவுக்கு வந்தது.. கட்டிப்போட்டு அடித்தனர்.. அது ஒரு 10 × 10 ரூம்.. 25 பேர் 25 பேர் அரை நிர்வாண நிலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.. ஆனால் என் மேல கொலை வெறியெல்லாம் போலீசுக்கு இல்லை.. நான் 2 நாள் ஸ்டேஷனிலேயே உண்ணாவிரதம் இருந்தேன்.. அப்பகூட 2 நாளைக்கு என்னை அடிக்கல.

சாத்தான்குளம் உட்பட எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் சரி, நேரில் பார்த்த சாட்சிதான் முக்கியம்.. ஒருவரை குற்றவாளி என்று உலகமே சொன்னாலும் சரி, அல்லது, ஒரு குற்றம் செய்ததாக அவரே ஒப்புக்கொண்டாலும், சரி, அது முதலில் கோர்ட்டில் நிரூபிக்கப்பட வேண்டும்... இன்னைக்கு இந்த சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று எல்லோருமே கோருகிறார்கள்.. ஆனாலும், கோர்ட் வளாகத்திற்குள், நேரில் பார்த்தவர்கள் மட்டுமே சாட்சியமளிக்க முடியுமே தவிர, பொது மக்கள் கிடையாது.

அதனால், அதிகாரிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய சாட்சிகள்தான் வலுவாக இருக்க வேண்டும்... இந்த வழக்கு மற்ற வழக்குகளைப் போல கிடையாது.. தற்காப்புக்காக ஒருவரை கொன்றதாக காவல்துறை சொல்லலாம்.. ஆனால் சம்பவம் ஸ்டேஷனிலேயே நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'ஜார்க்கண்ட் கொரோனா போர்க்களத்தில் தீரமுடன் பணியாற்றும் 42,000 'சாஹயாக்கள்'

சாத்தான்குளம் சம்பவம் என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே.. இதுபோல பல சித்ரவதைகள் இருக்கிறது.. வெளியே தெரியாத எத்தனையோ லாக்அப் சித்ரவதைகள் உள்ளன.. புகார் தந்துவிடுவதாலேயே அவர்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.. இறந்த 2 ஆண்களுக்கும் எந்த ஒரு தனிப்பட்ட வரலாறும் இல்லை.. இவர்கள் சாதாரண மக்கள்.. ஒரு செல்போன் கடையை நடத்தி வந்திருக்கிறார்கள்.. அதனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி உண்டு.

தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அறிக்கையானது, நடந்த சம்பவத்துக்கு முரணானது.. 2 பேரும், தரையில் உருண்டு உள் காயம் அடைந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்று சொன்னால், சிசிடிவி காட்சிகள் வேறு ஒன்றை காட்டுகிறது.. சரி, இந்த சிசிடிவியை கூட, விட்டுவிடுங்கள், ஸ்டேஷனில் டேபிளில் ரத்தக் கறைகள் இருந்ததே, அது எப்படி? போலீசார் கால்களையும் கைகளையும் கட்டி, டேபிளில் வைத்துதான் மணிக்கணக்கில் அடித்திருக்க வேண்டும்.

அந்த அறிக்கையில், பென்னிக்ஸ் தலையில் பல காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.. இது ஒரு மிருகத்தனமான செயல்.. காட்டுமிராண்டித்தனமான செயல். மன அழுத்தத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு பாடநெறியை வகுக்க வேண்டும்... ஆனால், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் கையாளதான் ஒரு போலீஸ் அதிகாரிக்கு பயிற்சியே அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் அவர்கள் அரசு ஊழியர்கள். இப்படி அப்பாவி மக்கள் மீது விரக்தியை காட்டக்கூடாது" என்றார்.

English summary
saathankulam death: novelist chandrakumar says about tn custodial deaths case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X