• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சிக்கும் "கறுப்பு ஆடு".. மொத்தம் 20 பேராமே.. "அவங்களை" கையில் எடுத்த திமுக.. திகுதிகு மேற்கு மண்டலம்

Google Oneindia Tamil News

சென்னை: புது ரத்தம் திமுகவுக்குள் பாய ஆரம்பித்துள்ளது.. புது புது ஆய்வுகள், புது புது சர்வேக்கள், புது புது முன்னெடுப்புகளில் திமுகவின் பலம் கொங்குவில் பதியப்பட்டு வருகிறது.. இதன்மூலம் விரைவில் அந்த கறுப்பு ஆடுகளுக்கு ஒரு முடிவுகட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது.. என்ன நடக்கிறது மேற்கு மண்டலத்தில்?

கடந்த மாதம் கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது கொங்கு மண்டலப்பகுதிகளில் சொல்லப்பட்டவை மக்களிடம் சென்றடையவில்லை...

எங்களின் கட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும்.. இப்போது இங்கு திமுக தலைவர்களின் எண்ணிக்கை வலுவாக இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றோம்.. அதற்காக வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்..

ஓஹோ.. ஸ்டாலின் ஓகே சொன்னது இதுக்குதானா?.. இப்ப ஓஹோ.. ஸ்டாலின் ஓகே சொன்னது இதுக்குதானா?.. இப்ப "அங்கே" இருந்து தூது வருதாமே.. ஒர்க் அவுட் ஆகுமா?

ஸ்டாலின்

ஸ்டாலின்

இப்போதுள்ள திமுக தலைவரின் செயல்பாட்டை பார்த்து இவருக்கு வாக்களிக்கவில்லையே என கொங்குநாட்டு மக்கள் பலர் வருத்தப்பட்டு வருகின்றனர்.. வரும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் நிச்சயம் கொங்கு மண்டலத்தில் பெரு வெற்றியை பெறுவோம்" என்று கூறியிருந்தார்..

முன்னெடுப்புகள்

முன்னெடுப்புகள்

இந்த பேட்டி பல விஷயங்களை உணர்த்திவிட்டு போனது.. கார்த்திகேய சிவசேனாதிபதி சொன்ன அத்தனை விஷயங்களையும் திமுக மேலிடமும் தற்போது உணர்ந்தும் வருகிறது.. அதற்கான முன்னெடுப்பைதான் இப்போதே தொடங்கி உள்ளது. மாற்று கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்தல், ஊழல் வழக்குகளின் மீதான விசாரணைகள் என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் நடைமுறையில் உள்ளன.. அதேசமயம், இவை எல்லா ஆளும் கட்சிகளும் செய்யக்கூடிய ஒன்றுதான்... ஆனால், இதுவரை யாரும் செய்யாத, ஒரு புதிய விஷயத்தை திமுக கையில் எடுத்துள்ளது..

 கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

அதன்படி ஒரு சர்வேயை கொங்கு மண்டலத்தில் எடுக்க தயாராகி உள்ளது.. இந்த சர்வேயை எடுக்க போவது ஐபேக் டீம்தான்.. இந்த முறை திமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது இந்த ஐபேக் டீம்தான்.. இந்த டீமை நேரடியாகவே சென்று ஸ்டாலின் பாராட்டி இருந்தார்.. இந்நிலையில், இந்த டீமில் சிறப்பாக வேலை பார்த்த 20 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை கொண்டு மேற்கு மண்டலத்தில் ஒரு சர்வேயை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்..

 20 பேர்

20 பேர்

ஒன்றியம் முதல் கிளைவரை ஆய்வு செய்ய போகிறதாம்.. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் அந்த பெரும்பான்மையான சமுதாயத்தை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் இறங்க உள்ளதாம்.. அந்த சமுதாயத்தை சேர்ந்த முக்கிய விஐபிக்கள், பிரமுகர்களை சந்தித்து பேசுதல், அவர்களின் குறைகளை கேட்டறிதல், பிறகு அவர்களை திமுக பக்கம் இழுக்க செய்தல், என்பன உட்பட பல அசைன்மென்ட்கள் கையில் எடுப்பதாக தெரிகிறது.. இது அத்தனையும் சபரீசன் தலைமையில் மேற்கொள்ள போகிறார்களாம்..

கொங்கு

கொங்கு

ஏற்கனவே கொங்குவில் ஏன் திமுக தோல்வி அடைந்தது என்ற காரணங்களை முதல்வர் கேட்டிருந்தார்.. அதன்படியே களப்பணியில் ஆய்வு செய்து, சில ரிப்போர்ட்களும் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.. திமுகவுக்கு உள்ளேயே சிலகருப்பு ஆடுகள் வேலை பார்த்து வந்ததாகவும், தேர்தல் வேலைகளை சிறப்பாக செய்யவில்லை என்றும், பல புகார்கள் பறந்த நிலையில், அதை பற்றியும் ஸ்டாலின் பெரிதாகவே எடுத்து கொள்ளவில்லை.. மா.செ.க்களின் மீதும் கடுமையை காட்டவில்லை.

  வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ திட்டம்- Gagandeep Singh Bedi-க்கு குவியும் பாராட்டு
   கருப்பு ஆடுகள்

  கருப்பு ஆடுகள்

  ஆனால், சபரீசன் & கோ கையில் எடுத்துள்ள இந்த பணியால், பல கருப்பு ஆடுகள் விரைவில் வெளிவரலாம் என்றும், அதற்கு பிறகு களையெடுப்புகள் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.. அப்படி களையெடுப்புகள் நடந்தால், அதில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்புகளை தந்து அழகு பார்க்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்..

  பலம்

  பலம்

  ஒரே டாஸ்க்கில், கட்சியும் பலம் பெறும், மேற்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கும் உயரும் என்று கணக்கு போடப்படுகிறது.. இதில், அந்த பெரும்பான்மை சமுதாயமானது, திமுகவுக்கு ஆதரவு தந்துவிட்டால், மேற்கு மண்டலத்தில் திமுகவை இனி வரும் காலங்களில் அசைக்க முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!

  English summary
  Sabareesans next level plan in the Kongu Region and Whats going on inside DMK
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X