சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சச்சின் வலைவீசி தேடிய ஹோட்டல் ஊழியர்..வேறு யாருமில்லை.. நம்ம சென்னைவாசிதானாம்.. பேரு குருபிரசாத்!

Google Oneindia Tamil News

சென்னை: முழங்கை கவசத்தை மாற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய தாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊழியர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக வந்த சச்சின் உள்ளிட்ட வீரர்கள் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்த ஒருவர் சச்சினின் எல்போ கார்டு அதாவது முழங்கை கவசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இல்லை என ஆலோசனை கூறியிருந்தார்.

குடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத் குடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்

உதவி

உதவி

அதன் பேரில் சச்சினும் அந்த ஆலோசனையை ஏற்று தனது எல்போ கார்டு வடிவத்தை மாற்றி அமைத்தார். அந்த ஊழியரின் ஆலோசனை தனக்கு உதவியாக இருந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.

ஊழியரை தேடிய சச்சிந்

ஊழியரை தேடிய சச்சிந்

இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.

சென்னை

சென்னை

அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என சச்சின் நெட்டிசன்களின் உதவியை நாடினார். இந்த நிலையில் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியவர் சென்னையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குருபிரசாத்

குருபிரசாத்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத்தான் சச்சினுக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பது தெரியவந்துள்ளது. தான் வழங்கிய ஆலோசனையால் எல்போ கார்டை சச்சின் மாற்றியது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக குருபிரசாத் தெரிவித்தார்.

English summary
Sachin Tendulkar finds a hotel staff who asked him to change his elbow guard belongs to Chennai. His name is Guruprasad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X