சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனது மக்கள் பாதை இயக்கம் வருங்காலத்தில் அரசியல் களத்தில் பங்கேற்கும்.. சகாயம்

Google Oneindia Tamil News

சென்னை: நான் வழிகாட்டியாக இருக்கும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காரனோடையை அடுத்த ஆத்தூரில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீர விளையாட்டுகளை அவர் கண்டு களித்தார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் பாதை அமைப்பு தொடர்ந்து சமூக மாற்றத்திற்காக களத்தில் இயங்கி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்

அடிமைத்தனம்

அடிமைத்தனம்

நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக் கூடும். நான் மிகவும் நேசிக்கக் கூடிய தமிழ் சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விழித்து எழ வேண்டும். அதை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

ஒப்பற்ற சமூகம்

ஒப்பற்ற சமூகம்

நமது தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்திருந்தால் அது நேர்மையான தலைவர்களை வெளிக் கொண்டு வந்திருக்கும். நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இந்திய நாட்டில் மட்டுமின்றி உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும்.

சமூகம்

சமூகம்

இப்போது அந்த நேர்மையோடு நம் சமூகத்தில் இருப்பதை பார்க்கிறேன். அதனால்தான் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த தோழர்கள், இளைஞர்கள் நேர்மைச் சமூகத்தை உருவாக்க களமாடுகிறார்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு நேர்மை சமூகத்தை உருவாக்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள்.

நேர்மையுள்ள

நேர்மையுள்ள

தகுதியுள்ள, நேர்மையுள்ள நெஞ்சுரமுள்ள இந்த இளைஞர்கள் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என சகாயம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வில் செல்லவுள்ளதாக அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதை அடுத்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.

English summary
Sagayam Retired IAS officer says that his People's Path movement will involve in future politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X